Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Nalini meets Murugan in Vellore jail after 50 days.

By   /  May 28, 2016  /  Comments Off on Nalini meets Murugan in Vellore jail after 50 days.

    Print       Email

201605281111528615_Nalini-Murugan-meeting-Vellore-Jail_SECVPF50 நாட்களுக்குப் பிறகு வேலூர் சிறையில் நளினி முருகனுடன் சந்திப்பு.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளான சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்டோர் வேலூர் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். அதேபோல் மற்றொரு குற்றவாளியான முருகனின் மனைவி நளினி, வேலூர் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

InCorpTaxAct
Suvidha

முருகனும், நளினியும் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து பேசுவதற்கு கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள மனைவி நளினியை 15 நாட்களுக்கு ஒருமுறை ஆண்கள் ஜெயிலில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்படும் முருகன் சந்தித்து பேசுவது வழக்கம்.

இந்த நிலையில், முருகன் கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக தீவிர மாரியம்மன் பக்தராக காவி உடையில் ஜெயிலில் இருந்தார். ஆன்மீக முக்கிய நாட்களில் விரதமும் இருக்கிறார் என கூறப்படுகிறது. அப்போது ஜெயிலில் மற்றவர்களிடம் அவர் பேசுவதை தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே கடந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து முருகன் திடீரென மவுன விரதம் இருந்தார். ஜெயிலில் உள்ள சக கைதிகள் மற்றும் ஜெயில் அதிகாரிகளிடம் பேசவில்லை. கடந்த 22 ஆண்டுகளாக ஜெயிலில் தண்டனை அனுபவித்து வருவதால் விடுதலை செய்யக்கோரி வேண்டுவதாகவும் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டதால் மவுனம் விரதம் இருக்கிறார் எனவும் முருகனின் மவுன விரதத்திற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது.

முருகனின் மவுன விரதம் காரணமாக 15 நாட்களுக்கு ஒருமுறை நளினியை சந்திக்க வேண்டிய சந்திப்பு கடந்த மாதம் 9-ந் தேதி முதல்முறை ரத்தானது. தொடர்ந்து அடுத்த சந்திப்பும் 2-வது முறையாக ரத்தானது. நளினியுடனான சந்திப்பை முருகன் தொடர்ந்து தவிர்த்து வந்தார். இந்த நிலையில், முருகனின் மவுன விரதம் தற்போது முடிவுக்கு வந்தது. இதனால் 50 நாட்களுக்கு பிறகு மனைவி நளினியை இன்று சந்தித்தார்.

காலை 7.30 மணிக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பன்னீர் செல்வம் தலைமையிலான போலீஸ் பாதுகாப்புடன் முருகனை பெண்கள் ஜெயிலுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நளினியை சந்தித்து அரைமணி நேரம் பேசினார். அப்போது மவுன விரதம் இருந்ததற்கான காரணத்தை மனைவியிடம் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து மீண்டும் ஆண்கள் ஜெயிலிக்கு அழைத்துச் செல்லப்பட்டு முருகன் அடைக்கப்பட்டார். தற்போது சக கைதிகள் மற்றும் ஜெயில் அதிகாரிகளிடம் அவர் வழக்கம்போல் பேசி வருகிறார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →