மந்திரங்கள் வேறுபட்டாலும் சிவன் என்பதே ஆதி மந்திரம்: சிலை திறப்பு விழாவில் மோடி பேச்சு
கோவை வெள்ளியங்கிரி மலையில் ஆதியோகி சிவன் சிலையை தீபம் ஏற்றி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
பின்னர் விழாவில் தமிழில் வணக்கம் கூறி மோடி தனது பேச்சை தொடங்கினார்.
விழாவில் மோடி பேசியதாவது:-
ஆதியோகி சிவன் சிலைதிறப்பு விழாவில் பங்கேற்றதில் பெருமை அடைகிறேன். நல்லவற்றுக்கு போராடும் திறனை இறைவன் தருகிறான்.
ஒரு ஜீவனை சிவனாக்குவது யோகப் பயிற்சி. ஒரு ஜீவாத்மாவை பரமாத்வாக மாற்றுகிறது யோகா. யோகா கலையை காப்பாற்றுவது மிகவும் முக்கியம். உடல் ஆரோக்கியத்தை காக்க யோகா முக்கியமானதாக இருக்கிறது. உணர்விலிருந்து சிவனுக்கு அழைத்து செல்லும் கிரியா ஊக்கியாக யோகா விளங்குகிறது. யோகா பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் ஒற்றுமையை உணர முடியும்
எல்லா மனிதர்களின் இதயத்திலும் ஆன்மிகம் குடிகொண்டிருக்கிறது. மொழிகள் பல இருக்கலாம், ஆனால் ஆன்மிகம் ஒன்றுதான். சிவன்-பார்வதி ஒற்றுமை, இமயம்-குமரி ஒற்றுமை. காசி முதல் கோவை வரை சிவபெருமான் நம்மை இணைத்துள்ளார்
கடவுள் எந்த வடிவில் இருந்தாலு வழிபடுவது நம் பண்பாடு. மந்திரங்கள் வேறுபட்டாலும் சிவன் என்பதே ஆதி மந்திரம். புதிய சிந்தனைகளை வரவேற்பது தான் நமது சமூகம். பழமையான சிந்தனைகளை ஆய்வு செய்து புதுபித்துக் கொள்கிறோம். வேறுபாடுகளை கடந்து பக்தியால் ஒன்றுபட்டுள்ளோம். நமது கலாச்சாரத்தில் பெண்களின் பங்கு முக்கியமானது.
இவ்வாறு அவர் கூறினார்.
இறுதியில் வணக்கம் என்று கூறி பிரதமர் மோடி தனது உரையை முடித்தார்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.