Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

Navjothsingh Siddu quits MP post. May resign from BJP and join hands with Kejriwal.

By   /  July 18, 2016  /  Comments Off on Navjothsingh Siddu quits MP post. May resign from BJP and join hands with Kejriwal.

    Print       Email

sidhuநவ்ஜோத் சிங் சித்து எம்பி பதவியை ராஜினாமா செய்தார். பாஜகவிலிருந்தும் விலகப்போவதாகத் தகவல்.

“கிரிக்கெட் மைதானங்கள் என்பது மனைவிகள் போன்றது, அவை எந்த பக்கம் திரும்பும் என்பது யாருக்கும் தெரியாது”-இது  நவ்ஜோத் சிங் சித்துவின் பிரபலமான வாசகம். ஆனால் திடீரென எம்.பி. பதவியை ராஜினாமா செய்து, சித்துவும் எந்த பக்கம் திரும்புவார் என்பதை கணிக்க முடியாது என்று கூறும்படி செய்துவிட்டார்.

InCorpTaxAct
Suvidha

பா.ஜ.க.-வில் அங்கம் வகிக்கும் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரரான நவ்ஜோத் சிங் சித்து, கடந்த 2014ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், அவரது சொந்த தொகுதியான அமிர்தசரசில் போட்டியிட வாய்ப்பளிக்குமாறு கேட்டார். ஆனால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

ஆனால், அவரை சமாதனப்படுத்தும் வகையில் பா.ஜ.க. சார்பில் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார். மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட சில மாதங்களிலேயே அந்த பதவியை ராஜினாமா செய்து அக்கட்சிக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.

நவ்ஜோத் சிங், ஆம் ஆத்மி கட்சியில் சேர்வதற்காக பாஜக எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவரது மனைவி நவ்ஜோத் கவுர், பஞ்சாப் மாநில சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். அவரும் பதவி விலக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே வருகிற 2017ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற உள்ளது.  சட்டமன்றத் தேர்தலில் தீவிர பிரச்சாரத்தில் ஆம் ஆத்மி ஈடுபட உள்ள நிலையில்,  அக் கட்சியின் முதல்வர் வேட்பாளராக நவ்ஜோத் சிங் சித்து அறிவிக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →