Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

New minister criticize Actor Mohanlal for his support to Modi

By   /  November 24, 2016  /  Comments Off on New minister criticize Actor Mohanlal for his support to Modi

    Print       Email

பதவியேற்ற மறுநாளே நடிகர் மோகன்லாலை விமர்சித்து புதிய அமைச்சர் பரபரப்பு.201611241749016917_controversy-on-kerala-new-minister-mm-mani-after-review_secvpf

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையில் நடைபெறும் கம்யூனிஸ்டு கூட்டணி அரசில் விளையாட்டுத்துறை மந்திரியாக இருந்தவர் ஜெயராஜன். இவர் உறவினர்களுக்கு சலுகை காட்டினார் என்ற சர்ச்சையில் சிக்கியதால் பதவி விலகினார். இவருக்கு பதிலாக கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த கம்யூனிஸ்டு தலைவர் எம்.எம். மணி புதிய மந்திரியாக நியமிக்கப்பட்டார்.

InCorpTaxAct
Suvidha

எம்.எம். மணி நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் புதிய மந்திரியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

எம்.எம். மணி அரசியல் மேடைகளிலும், பொது நிகழ்ச்சிகளிலும் கடுமையான விமர்சனங்களை வைப்பது வழக்கம். இதனால் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவார். இதனால் இவருக்கு கட்சிக்குள்ளும் எதிர்ப்பு இருந்து வந்தது.

மந்திரியாக நியமிக்கப்பட்டதற்கே கட்சி நிர்வாகிகள் சிலர் ஆட்சேபனை தெரிவித்தனர். அவர்களை சமரசம் செய்து மூத்த நிர்வாகிகள் இவருக்கு மந்திரி பதவி வழங்கினர்.

பதவி ஏற்றதும், நேற்று இடுக்கி மாவட்டத்தில் மந்திரி மணிக்கு பாராட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட மந்திரி மணி தனது முதல் கூட்டத்திலேயே நடிகர் மோகன்லால் பற்றி விமர்சனம் செய்தார்.

நடிகர் மோகன்லால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்த பிரதமர் மோடியின் நடவடிக்கையை பாராட்டி கருத்து தெரிவித்திருந்தார். மது வாங்கவும், கோவிலில் தரிசனம் செய்யவும், சினிமா தியேட்டரில் டிக்கெட் வாங்கவும் வரிசையில் நிற்கும் நமக்கு, பழைய நோட்டை மாற்ற வரிசையில் நிற்பதை விமர்சிக்கக்கூடாது என்று கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில், மந்திரி மணி கூட்டத்தில் பேசியதாவது:-

நடிகர் மோகன்லாலிடம் கோடிக்கணக்கில் கருப்பு பணம் குவிந்து கிடக்கிறது. இதனை மாற்றுவதற்காகவே அவர் பிரதமர் மோடியை ஆதரித்து பேசி வருகிறார்.

கேரளாவில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ஓ.ராஜகோபால் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆகி உள்ளார். இது மலையாளிகள் செய்த மாபெரும் தவறாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நடிகர் மோகன்லாலை விமர்சித்து பேசிய மந்திரி மணியின் கருத்தால் கேரளாவில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →