Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

New TV channel for Liberation Tigers – ‘Velicham’ Thiruma starts.

By   /  April 1, 2016  /  Comments Off on New TV channel for Liberation Tigers – ‘Velicham’ Thiruma starts.

    Print       Email

thol-thirumavalavan-10விடுதலைச் சிறுத்தைகளுக்கான தனி தொலைக்காட்சி சேனல் – ‘வெளிச்சம்’ திருமாவளவன் தொடங்குகிறார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தொலைக்காட்சி விரைவில் தொடங்கப்படும் என்று கடந்த ஆண்டு கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்து இருந்தார். கடந்த பொங்கல் திருநாளில் திறப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்தன. ஆனால் பல்வேறு காரணங்களால் தொலைக்காட்சி திறப்பு தள்ளிப்போனது.

InCorpTaxAct
Suvidha

இந்த நிலையில் வருகிற 14-ந்தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ‘வெளிச்சம்’ என்ற புதிய செய்தி தொலைக்காட்சி தொடங்கப்படுகிறது. அம்பேத்கர் பிறந்தநாளில் இதனை திறக்க தொல்.திருமாவளவன் முடிவு செய்துள்ளார். இதுகுறித்து திருமாவளவன் கூறியதாவது:-

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தொலைக்காட்சி சேனல் ஆரம்பிக்க வேண்டும் என்பது நீண்ட கால திட்டம். அது இப்போது நிறைவேறி உள்ளது. மருதம் டெலிவிஷன் நெட் ஒர்க் விடுதலை சிறுத்தையின் செய்தி நிறுவனமாகும். அதன் சார்பில் ‘வெளிச்சம்’ தொலைக்காட்சி தொடங்குகிறோம்.

இதன் தொடக்கவிழா அம்பேத்கர் பிறந்த நாளான 14-ந்தேதி நடைபெறுகிறது. சென்னை அசோக்நகர் 100 அடிசாலையில் உள்ள அலுவலகத்தில் அவை இயங்கும். தொடக்க விழாவில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன் ஆகியோர் பங்கேற்க அழைப்பு விடுத்து இருக்கிறேன்.

வெளிச்சம் செய்தி தொலைக்காட்சியில் கட்சி சார்பற்று அனைத்து தரப்பு செய்திகளும் இடம் பெறும். குறிப்பிட்ட கட்சிகளுக்காக மட்டும் இருக்காது. நீண்ட காலமாக விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு தொலைக்காட்சி நிறுவப்பட வேண்டும் என்ற எண்ணம் இப்போது நிறைவேறியுள்ளது. இதன் திறப்பு விழாவில் தே.மு.தி.க.-மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →