Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

‘News nation’ prediction says DMK will capture power.

By   /  April 2, 2016  /  Comments Off on ‘News nation’ prediction says DMK will capture power.

    Print       Email

newsnation‘திமுக ஆட்சியைக் கைப்பற்றும்’- நியூஸ் நேஷன் தொலைக்காட்சி கருத்துக்கணிப்பு தகவல்.

அதிமுக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என இந்தியா டிவிமற்றும் சி-வோட்டர் நிறுவனம் நடத்திய  கருத்துக் கணிப்பில் தகவல் வெளியானாலும், அதன் வாக்கு சதவீதம் இந்த தேர்தலில் சரியலாம் என்று கருதப்படுகிறது.

InCorpTaxAct
Suvidha

இந்த நிலையில் நியூஸ் நேஷன் என்கிற மற்றொரு தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பில் திமுக அதிக இடங்களைக் கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது.  10000 பேரிடம் நடத்திய ஆய்வு முடிவின் அடிப்படையில் இந்த கருத்துக் கணிப்பு நடைபெற்றதாக  நியூஸ்  நேஷன் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. அதில் திமுக 107 இடங்கள் முதல் 111 இடங்கள் வரை  கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக 103 இடங்களிலிருந்து 107 இடங்களைக் கைப்பற்றும் என்றும், மக்கள் நலக் கூட்டணி 14 இடங்களிலிருந்து 18 இடங்கள் வரை பெறும் என்றும், மேலும் பாஜக ஒரு தொகுதி கூட கைப்பற்ற வாய்ப்பில்லை என்றும் நியூஸ் நேஷன் கருத்துக் கணிப்பு கூறுயுள்ளது.

முதல்வர் வேட்பாளர் :

முதலமைச்சர் வேட்பாளர்களில்

ஜெயலலிதா- 30 சதவிகிதம்,

கலைஞர் – 29 சதவிகிதம்

ஸ்டாலின் – 08 சதவிகிதம்

விஜயகாந்த் –  13 சதவிகிதம்

வைகோ-  01 சதவிகிதம்

சிதம்பரம் – 04சதவிகிதம்  என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

வாக்கு சதவிகிதம்:

அதிமுக – 30%

திமுக   – 33%

தேமுதிக- ம.ந.கூ. – 22%

பாஜக – 02%

இதர  – 06%

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →