Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Nitish Kumar breaks his silence over Mathura violence: Avoids Akilesh name.

By   /  June 5, 2016  /  Comments Off on Nitish Kumar breaks his silence over Mathura violence: Avoids Akilesh name.

    Print       Email

nitish kumar_4_0மதுரா கலவரம் குறித்து நிதிஷ்குமார் கருத்து;’ போலீசாரின் அதிரடி நடவடிக்கை கவலை அளிக்கிறது’

உத்தரபிரதேசம் மாநிலம் மதுரா நகர் அருகே உள்ள ஜவஹர் பாக் பகுதியில் தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான 260 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து குடியிருந்தவர்களை கோர்ட் உத்தரவின்பேரில் அகற்றும் நடவடிக்கையின்போது வன்முறை வெடித்தது. இதில் 2 போலீஸ் அதிகாரிகள் உட்பட 29 பேர் கொல்லப்பட்டனர்.

InCorpTaxAct
Suvidha

நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக முழு உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. தற்போது, மதுராவில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. நீதி விசாரணையும் தொடங்கி உள்ளது.

இந்த வன்முறை குறித்து அரசியல் தலைவர்கள் தங்களது கண்டனங்களையும், கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இதுவரையில் மவுனம் காத்த பீகார் முதல்வர் இன்று இதுகுறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார். போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கை கவலை அளிப்பதாக கூறிய அவர், நீண்டகாலமாக அந்த இடம் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்ததும், அவர்களிடம் ஏராளமான ஆயுதங்கள் இருந்ததும் வியப்பாக உள்ளது என்றார்.

ஆனால், அவர் உத்தர பிரதேச அரசாங்கத்தையோ, முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் பெயரையோ குறிப்பிட்டு எதுவும் பேசவில்லை.

மேலும், பீகாரில் அமல்படுத்தப்பட்டுள்ள மதுவிலக்கு குறித்து பேசிய அவர், இதற்கு நாடு முழுவதும் பாராட்டு பெற்றிருப்பதாக கூறினார். மேலும், பிரதமர் மோடி, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களை மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →