Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Nitish ties Rakhi to tree to promote awareness on Green India.

By   /  August 18, 2016  /  Comments Off on Nitish ties Rakhi to tree to promote awareness on Green India.

    Print       Email

236478531-NitishRakhitotreesaveenvironment_6மரத்துக்கு ராக்கிக் கயிறு கட்டினார் நிதிஷ்குமார்.

இன்று நாடு முழுவதும் ரக்‌ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பெண்கள் தங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாக பாவிப்பவர்களுக்கு ராக்கி கயிறு கட்டி பரிசு பெற்று வருகிறார்கள். ஆனால், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மாநிலம் முழுவதும் பச்சைப்பசேல் என்று தோன்றும் வகையில் மரங்களை வளர்ப்பதற்கான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த மரத்திற்கு ராக்கி கயிறு கட்டினார்.

InCorpTaxAct
Suvidha

இதுகுறித்து நிதிஷ் குமார் கூறுகையில் ‘‘பீகார் மாநிலம் சுற்றுச்சூழலில் இந்தியாவின் சிறந்த மாநிலமாக விளங்க, கடந்த 2011-ம் ஆண்டு ‘ஹரியாலி மிஷன்’ என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது மரங்கள் வளர்ப்பதில் 9 விழுக்காட்டில் இருந்து 17 சதவீதத்திற்கு உயர்த்த வேண்டும் என்பதை இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

கடந்த இரண்டு வருடத்திற்கு முன் மரம் வளர்ப்பதில் பீகார் மாநிலம் 9 சதவீதத்தில் இருந்து 13 சதவீதமாக உயர்ந்துள்ளது. தற்போது அதை நாம் எட்டியிருப்போம் அல்லது நெருங்கியிருப்போம் என்று நம்புகிறேன்.

எனது தலைமையிலான அரசு மரங்கள் வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது. இதை முக்கிய குறிக்கோளாக கொண்டுள்ளது. இதன் காரணமாக தனது கட்சியில் இணையும் ஒவ்வொரு தொண்டனும் ஒரு மரத்தை நட்டு அதை புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை கட்டாயமாக்கியுள்ளேன்’’ என்றார்.

பாட்னாவில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நிதிஷ்குமாருடன் மாநில கூட்டுறவு மந்திரி அலோக் மேத்தா, சட்டசபை துணைத் தலைவர் ஷியாம் ராஜக், வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் முதன்மை செயலாளர் விவோக் குமார் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக நிதிஷ்குமாருக்கு அவரது சகோதரிகள் ராக்கி கயிறு கட்டிவி்ட்டனர். ராஷ்டிரிய ஜனதா தள தலைவரான லாலு பிரசாத் யாதவும் மரத்திற்கு ராக்கி கயிறு கட்டினார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →