கிங்ஃபிஷர் உட்பட அதன் பிராண்டுகள் எதையும் ஏலத்தில் எடுக்க யாரும் முன்வரவில்லை; வங்கிகள் முயற்சி தோல்வி.
ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 17 வங்கிகளில் ரூ.9000 கோடி கடன் வாங்கிவிட்டு, அதனை செலுத்த முடியாமல் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்ற விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதுடன், அவரை விசாரணைக்கு கொண்டு வருவது தொடர்பாக இங்கிலாந்து தூதரகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
அதேசமயம் மல்லையாவுக்கு கடன் கொடுத்த வங்கிகள், கடனுக்காக உத்தரவாதமாக பெறப்பட்ட சொத்துக்களை விற்று கடனை வசூலிக்கும் நடவடிக்கையையும் தொடங்கி உள்ளன. அதன்படி மல்லையாவின் விமான நிறுவனமான கிங்பிஷர் தலைமை அலுவலகத்தை ஏலம் மூலம் விற்பனை செய்ய முயன்றன ஆனால், அதனை ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை.
இதையடுத்து கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பிராண்டுகள் மற்றும் வணிக முத்திரைகள் இன்று ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டன. வணிக முத்திரையின் அடிப்படை விலை 366.70 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், யாரும் ஏலம் கேட்க முன்வராததால் வங்கிகளின் முயற்சி மீண்டும் தோல்வியில் முடிந்தது.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.