Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

No campaign through cell phones : Election commissioner warns stern action against violators

By   /  May 1, 2016  /  Comments Off on No campaign through cell phones : Election commissioner warns stern action against violators

    Print       Email

201605010449335906_cell-phone-crackdown-on-the-campaign-Tamil-Nadu-Chief_SECVPFசெல்போனில் பிரச்சாரம் செய்யக்கூடாது. மீறினால் நடவடிக்கை – தேர்தல் கமிஷனர் கண்டிப்பு.

எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று செல்போனில் பிரசாரம் செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி எச்சரித்துள்ளார்.

InCorpTaxAct
Suvidha

இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னையில் சில தொகுதிகளில் செல்போன் மூலம் சில வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஓட்டுப்போடுங்கள் என்று கேட்டு தேர்தல் பிரசாரம் செய்யப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. இது தேர்தல் விதிமுறைகளுக்கு முரணானது. செல்போனில் பிரசாரம் செய்ய வேண்டுமென்றால் அதுபற்றி முன்கூட்டியே தெரிவித்து தேர்தல் அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும்.

அனுமதி பெறாமல் செல்போனில் பிரசாரம் செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அந்த பிரசாரத்தில் வேட்பாளரின் பெயர் இடம் பெற்றிருந்தால் அதற்கான செலவு வேட்பாளரின் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்படும்.

ஓட்டுச்சாவடிகளில் வாக்களிக்க நடிகர்-நடிகைகள் வந்தால் அவர்களுக்கு தனி வரிசை கிடையாது. அவர்கள் பொதுமக்கள் நிற்கும் வரிசையில் நின்று தான் வாக்களிக்க வேண்டும். ஆனால் மாற்றுத் திறனாளிகள் மற்றும் வயதானவர்கள் வந்தால் அவர்கள் வரிசையில் நிற்காமல் நேராக சென்று வாக்களிக்கலாம்.

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக தமிழகத்துக்கு மொத்தம் 300 கம்பெனி துணைராணுவத்தினர் வருகிறார்கள். அவர்களில் முதல் கட்டமாக 40 கம்பெனி துணைராணுவத்தினர் வருகிறார்கள்.

அவர்களில் 25 கம்பெனி துணை ராணுவத்தினர் இன்று(ஞாயிற்றுக்கிழமை) அல்லது நாளை(திங்கட்கிழமை) விமானம் மூலம் சென்னைக்கும், 7 கம்பெனியினர் திருவனந்தபுரத்துக்கும், 8 கம்பெனியினர் பெங்களூருக்கும் வருகிறார்கள்.

திருவனந்தபுரத்தில் இறங்கும் துணைராணுவத்தினர் மதுரை, நெல்லை உள்பட தென் மாவட்டங்களிலும், பெங்களூரு வரும் துணைராணுவத்தினர் கோவை உள்பட மேற்கு மாவட்டங்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

சென்னைக்கு வருபவர்கள் சென்னை, காஞ்சீபுரம் உள்பட வடமாவட்டங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.(ஒரு கம்பெனியில் 100 பேர் இருப்பார்கள். அவர்களில் 72 பேர் பணியிலும், மற்றவர்கள் சமையலர்கள், டிரைவர்கள் போன்ற பணிகளில் ஈடுபடுபவர்களாக இருப்பார்கள்.)

இவ்வாறு அவர் கூறினார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →