Loading...
You are here:  Home  >  Deccan Abroad  >  Current Article

No coalition.  It  will be  DMK  Govt.  only- clarifies  Stalin.

By   /  March 20, 2016  /  Comments Off on No coalition.  It  will be  DMK  Govt.  only- clarifies  Stalin.

    Print       Email

திமுக ஆட்சி அமைத்தால் கூட்டணி கட்சிகளுக்குப் பங்கு இல்லை- ஸ்டாலின் அறிவிப்பு.11-1439274396-stalin343-23600-0

திருச்சி மாவட்டம் சிறுகனூரில்  நடைபெற்று வரும் திராவிடர் கழக இரண்டாம் நாள் மாநாட்டில்  கலந்து கொள்வதற்காக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் திருச்சி வந்தார்.

InCorpTaxAct
Suvidha

விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கே: அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில்  மது  விலக்கு குறித்த தகவல் இடம் பெறுவதாக கூறப்படுகிறதே?

ப: அப்படி இருந்தால் அது மக்களை ஏமாற்றும் செயல் பாடாகத்தான் இருக்கும்.

கே: தி.மு.க. ஆட்சி அமைந்தால் அமைச்சரவையில்  கூட்டணி கட்சிகளுக்கு பங்கு உண்டா?

ப: வாய்ப்பு இல்லை.

கே: தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கிறதா?

ப: தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் ஓரளவு திருப்திகரமாக இருக்கிறது. ஆனாலும் அதில் உள்ள சில குறைபாடுகள், பிரச்சினைகள் குறித்து எங்கள் வக்கீல் அணியினர் தமிழக தேர்தல் ஆணையத்திடமும், டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திடமும் தொடர்ந்து புகார்கள் தெரிவித்து வருகிறார்கள். அந்த குறைகள் சரி செய்யப்படவேண்டும்    என்பதே எங்கள் வேண்டுகோள்.

கே: ஓ.பன்னீர்செல்வம் எங்கே? என்று கருணாநிதி அறிக்கைக்கு பிறகே வெளியே வந்திருக்கிறார் என்பது குறித்து?

ப: அப்படியும் இருக்கலாம்.

கே: தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது குறித்து விரைவில் கருணாநிதியை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறதே?

பதில்: அப்படி ஒரு தகவல் உங்களிடம் இருந்தால் நீங்களே எங்களிடம் சொல்லுங்கள். அப்படி உங்களுக்கு தெரியாமல் எங்களிடம் வந்தால் நாங்கள் உங்களிடம் சொல்கிறோம்.

கே: தி.மு.க. கூட்டணிக்கு வெறும் அமைப்புகள் மட்டுமே ஆதரவு தெரிவித்து வருகிறதே?

ப: ஏற்கனவே காங்கிரஸ் கட்சி  எங்கள்  கூட்டணியில் இணைந்துள்ளது.  இதன் மூலம் தி.மு.க. கூட்டணி பலம் வாய்ந்த வலுவான கூட்டணியாக திகழ்கிறது. மேலும் மனித நேய மக்கள், எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இவைகளை வெறும் அமைப்புகள் என்று கொச்சைப்படுத்தாதீர்கள். அவர்களும் வாக்காளர்கள்தான். அவர்களுக்கும் சமுதாயத்தில் முக்கிய பங்கு உண்டு. ஆளும் அ.தி.மு.க. ஆட்சியால் வெறுப்படைந்து எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.

கேள்வி: அ.தி.மு.க. அமைச்சர்கள் சிறை வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறதே?

பதில்:அ.தி.மு.க.வில் இது புதியது அல்ல. பெரிய பெரிய தவறுகளை மூடி மறைக்க சிறிய தவறு செய்த அமைச்சர்கள் பலிகடா ஆக்கப்பட்டு உள்ளனர். இதுபற்றி போயஸ் கார்டனில்தான் கேட்க வேண்டும். உடுமலைபேட்டை சங்கர் கொலையில் தமிழக அரசு எந்த நடவடிக்கைவும் எடுக்கவில்லை. இந்த சம்பவத்துக்கு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →