Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

No entry for ladies to Sabarimala Temple! Kerala govt firm in its stand

By   /  February 6, 2016  /  Comments Off on No entry for ladies to Sabarimala Temple! Kerala govt firm in its stand

    Print       Email

சபரிமலைக் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க முடியாது. கேரள அரசு திட்டவட்டம், banner

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலையில் உள்ள ஐயப்பனை 18 படியேறி தரிசனம் செய்வதற்கு, 41 நாட்கள் கடும் விரதம் இருந்து இருமுடியுடன் வரும் ஐயப்ப பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கபடுகின்றனர்.

InCorpTaxAct
Suvidha

கோயிலின் புனிதத்தை காக்கும் பொருட்டு, மாதவிடாய் ஏற்படும் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. எனினும் பருவம் அடைவதற்கு முன், 10 வயது வரையிலும், மாதவிடாய் நின்றபின் 50 வயதுக்கு மேற்பட்டும் பெண்கள் சபரிமலைக்கு வர அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், அனைத்து வயது பெண்களையும் சபரிமலையில் அனுமதிக்க கோரி இளம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் என்.வி.ரமணா அடங்கிய அமர்வு முன் கடந்த மாதம் (ஜனவரி) 12-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, “பெண்களை ஏன் அனுமதிக்க மறுக்கிறீர்கள்? எந்த அடிப்படையில் பெண்கள் கோயிலுக்குள் நுழைவதை தடுக்கிறீர்கள்? இதன் தர்க்கம் என்ன?” என்று நீதிபதி தீபக் மிஸ்ரா அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார். மேலும் பெண்களை கோயிலுக்குள் செல்ல மறுப்பது குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி இவ்வழக்கின் அடுத்த விசாரணையை இம்மாதம் பிப்ரவரி 8-ம்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று பதில் மனு தாக்கல் செய்தது. அதில், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க முடியாது என்று கேரள அரசு தெரிவித்துள்ளது. மேலும், மரபுகளை மீற முடியாது என்றும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் கேரள அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →