Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

No minister visit Sashikala – says Jayakumar.

By   /  October 11, 2017  /  Comments Off on No minister visit Sashikala – says Jayakumar.

    Print       Email

சசிகலாவை அமைச்சர்கள் யாரும் சந்திக்கவில்லை: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

 

Suvidha
Biryani Pot

 

 

சென்னை பட்டினம்பாக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பரோலில் வந்துள்ள சசிகலாவை அமைச்சர்கள் தொடர்பு கொண்டு பேசியதாக வெளியான தகவல்கள் முழுக்க முழுக்க தவறானது. அவரை யாரும் தொடர்பு கொண்டு பேசவில்லை. அதுபோன்ற எண்ணமும் யாருக்கும் இல்லை.

தமிழகத்தில் டெங்குவை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முதல்-அமைச்சரின் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொது மக்கள் அரசோடு இணைந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் டெங்கு இல்லா தமிழகத்தை உருவாக்க முடியும்.

தமிழகத்தில் டெங்கு ஆட்சி நடப்பதாக மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டு இருப்பதை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஊழலில் திளைத்த கட்சி தான் தி.மு.க. எனவே ஊழல் பற்றி பேசு வதற்கு மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இல்லை.

குட்கா விவகாரத்தில் எந்த விதி மீறல்களும் நடக்கவில்லை. அடிப்படை முகாந்திரம் உள்ள 17 பேர் மீதுதான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Charter Global
Swapna
InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

TANA will not let criminals run our well earned reputation, Satish Vemana

Read More →