Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

‘No  need  to  cover  Kamaraj, MGR,  Ambedker  statues’  tells  TN Election  Officer  Lakkani

By   /  March 20, 2016  /  Comments Off on ‘No  need  to  cover  Kamaraj, MGR,  Ambedker  statues’  tells  TN Election  Officer  Lakkani

    Print       Email

election-commission-rajesh-lakhani-byte-324x400தேர்தல் நடத்தை விதிகளுக்காக காமராஜர் அண்ணா எம்ஜிஆர் போன்ற மறைந்துவிட்ட தலைவர்களின் சிலைகளை மூடவேண்டாம்.- தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி லக்கானி விளக்கம்.

தமிழ்நாட்டில் சட்டசபைதேர்தல் மே மாதம் நடைபெற இருப்பதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் கடுமையாக அமுல்படுத்தப்பட்டு வருகின்றன.

InCorpTaxAct
Suvidha

இதன் ஒரு பகுதியாக மறைந்த தலைவர்களின் சிலைகளை மறைக்கும் பணி தமிழ்நாடு முழுவதும் வேகமாக நடைபெற்று வந்தது.

சட்டமேதை அம்பேத்கார், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோரது சிலைகளை கிழிந்த அழுக்கு துணிகளை பயன்படுத்தி மூடி வந்தனர்.

சில பகுதிகளில் சாக்கு பைமூலம் சிலைகளை மறைத்ததுடன் கழுத்தில் கயிறு மூலம் கட்டி வைத்திருந்தனர். சேலத்தில் இன்னும் அதிக பட்சமாக திருவள்ளுவர் சிலையையும் மூடினர். இதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

மறைந்த தலைவர்கள், முன்னாள் முதல்வர்கள், தமிழறிஞர்கள் சிலைகளை மறைப்பது தேவையில்லாத ஒன்று என மக்கள் கருத்து தெரிவித்தனர்.

இது பற்றி சில பத்திரிகைகளில் விரிவான செய்தியும் வெளியிடப்பட்டிருந்தது.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கவனத்துக்கு இந்த விஷயம் கொண்டு செல்லப்பட்டது.

இதையொட்டி அவர் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அதில் மறைந்த அரசியல் தலைவர்களின் சிலைகள், தமிழறிஞர்கள் சிலைகளை மறைக்க தேவையில்லை. தேர்தல் அலுவலர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் உடனடியாக எங்களை அணுகி விளக்கம் கேட்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

அம்பேத்கார், பெரியார், காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர். உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளை மறைக்க தேவையில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →