Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

No  Plastic bottles in  Sabarimala . Rules HC.

By   /  February 17, 2016  /  Comments Off on No  Plastic bottles in  Sabarimala . Rules HC.

    Print       Email

சபரி மலையில் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர், குளிர்பானம் விற்கத் தடை. உயர்நீதி மன்றம் உத்தரவு.banner

பிரசித்திபெற்ற சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மகரவிளக்கு பூஜை மற்றும் மண்டல பூஜையின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் திரள்வார்கள்.

InCorpTaxAct
Suvidha

மேலும் ஒவ்வொரு தமிழ் மாதமும் சபரிமலைக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் போதும் அதிகளவு அய்யப்ப பக்தர்கள் வருகை தருகிறார்கள். சபரிமலை வரும் பக்தர்கள் வசதிக்காக திருவிதாங்கூர் தேவசம் போர்டு பல்வேறு வசதிகளை செய்து கொடுத்துள்ளது. மேலும் சபரிமலையின் புனிதத்தையும், தூய்மையையும் பராமரிக்க அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

அதன்படி சபரிமலையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் பம்பை நதியில் ஆடைகளை மிதக்கவிட்டால் அவர்களை ஜெயிலில் அடைக்கவும் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.  இந்த நிலையில் சபரி மலையில் தற்போது மாசி மாத பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி அய்யப்பனுக்கு விசேஷ பூஜைகள் நடந்து வருகிறது. இதையொட்டி இருமுடி கட்டிய பக்தர்கள் சபரிமலைக்கு சென்று சுவாமி அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்து வழிபட்டு வருகிறார்கள்.

இதற்கிடையில் சபரி மலையில் தூய்மை பணி கடைபிடிக்கப்படுவது தொடர்பான அறிக்கையை திருவிதாங்கூர் தேவசம் போர்டு கேரள ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது. இதை விசாரித்த நீதிபதிகள் சில உத்தரவுகளை பிறப்பித்தனர். அதன்படி சபரிமலையில் பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் விற்க ஐகோர்ட்டு தடை விதித்து உள்ளது.

இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க தேவசம் போர்டை வலியுறுத்தி உள்ளது. மேலும் மகரவிளக்கு, மண்டல பூஜை மற்றும் மாதாந்திர பூஜையின்போது சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு சுக்கு காப்பி வழங்கவும் தேவசம் போர்டுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →