Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

No respect for Actors & actresses these days – feels Kareena Kapoor.

By   /  April 4, 2016  /  Comments Off on No respect for Actors & actresses these days – feels Kareena Kapoor.

    Print       Email

Kareena-Kapoor-Khan’s-diet-secret-revealedரசிகர்கள் மத்தியில் நடிகர்- நடிகைகளுக்கு இப்போதெல்லாம் மரியாதை இல்லை- வருத்தப்படுகிறார் கரீனா கபூர்.

-இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் கரீனா கபூர். இவருக்கும் இந்தி நடிகர் சயீப் அலிகானுக்கும் 2012-ல் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். கி அன்ட் கா இந்தி படத்தில் அர்ஜுன்கபூருடன் முத்த காட்சியில் நடித்து பரபரப்பு ஏற்படுத்தினார். இது சயீப் அலிகானுக்கு பிடிக்கவில்லை என்றும் இதனால் கரீனா கபூர் இல்லற வாழ்க்கையில் புயல் வீச தொடங்கி இருப்பதாகவும் கிசுகிசுகள் பரவி உள்ளன.

InCorpTaxAct
Suvidha

இருவரும் இதுபற்றி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் நடிகர்-நடிகைகளுக்கு சமூகத்தில் மரியாதை இல்லாத நிலைமை ஏற்பட்டு உள்ளது என்று கரீனாகபூர் வருத்தப்பட்டார். இது குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-

‘‘திரைப்பட உலகில் முந்தைய காலங்களில் நடிகர்-நடிகைகளுக்கு மரியாதை இருந்தது. பழைய நடிகர்-நடிகைகளுக்கு ரசிகர்கள் வரவேற்பு அளித்தனர். மதிக்கவும் செய்தார்கள். தங்கள் மானசீக நட்சத்திரங்கள் நடித்த படங்களை தியேட்டர்களில் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆர்வமும் அவர்களிடம் இருந்தது. பொது நிகழ்ச்சிகளில் அவர்களை பார்க்க வேண்டும் என்றும் விருப்பப்பட்டனர்.

ஆனால் இப்போது அந்த நிலைமை இல்லை. நடிகர்-நடிகைகளை யாரும் மதிப்பது இல்லை. அவர்களை மலிவாக பார்க்கிறார்கள். இதற்கான தவறு நடிகர்கள் பக்கம் தான் இருக்கிறது. தங்கள் படங்களை சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது அவர்கள் வெளியிட்டு விடுகின்றனர். தங்களது குளியலறை படங்களையும் ரசிகர்கள் பார்வைக்காக சமூக வலைத்தளத்தில் பரவ விடுகின்றனர். இதனால்தான் நடிகர்களுக்கு மதிப்பு, மரியாதை இல்லாமல் போய்விட்டது. நடிகர்களை பார்க்க வேண்டும் என்ற ஆர்வமும் ரசிகர்களிடம் குறைந்து விட்டது.

நடிகர்-நடிகைகள் அரசியல்வாதிகளோ, புரட்சி ஏற்படுத்துகிறவர்களோ இல்லை. மக்களை சந்தோஷப்படுத்துவதே எங்கள் வேலை. படத்தில் இருக்கும் நல்ல கருத்துகளை எடுத்துக்கொண்டால் மகிழ்ச்சி. அப்படி எடுக்காவிட்டாலும் பிரச்சினை இல்லை.’’

இவ்வாறு கரீனாகபூர் கூறினார்.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →