Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

No separate Queue for Film Stars –Lakkani clarifies

By   /  May 2, 2016  /  Comments Off on No separate Queue for Film Stars –Lakkani clarifies

    Print       Email

1456882075-0188வாக்குப்பதிவு மையங்களில் நடிகர், நடிகைகளுக்கு தனி வரிசை கிடையாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.

நடிகர் நடிகைகள் தனியாக நின்று வாக்களித்துவிட்டுப் போகலாம் என்று ஒரு செய்தி வந்திருந்தது. அப்படி எந்த ஏற்பாடுகளும் இல்லை. அவர்களுக்கென்று தனி வரிசையெல்லாம் கிடையாது. அவர்களும் மற்றவர்கள் போல் வரிசையில் நின்றுதான் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையர் கூறினார்.

InCorpTaxAct
Suvidha

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் மே 16ஆம் தேதி அன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஓட்டுப்போட வரும் நடிகர், நடிகைகளுக்கு தனி வரிசையோ அல்லது அவர்கள் வந்தவுடன் நேராக சென்று வாக்களிக்கவோ அனுமதி கிடையாது.

பொதுமக்களுடன் வரிசையில் நின்றுதான் நடிகர் நடிகைகள் வாக்களிக்க வேண்டும். அதேநேரம் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வரிசையில் நிற்க தேவையில்லை. நேராக உள்ளே சென்று வாக்களிக்க அனுமதிக்கப்படும் என்றார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →