Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

Nobody has the power to dissolve Jayalalithaa’s rule: Thambidurai

By   /  June 19, 2017  /  Comments Off on Nobody has the power to dissolve Jayalalithaa’s rule: Thambidurai

    Print       Email

ஜெயலலிதாவின் ஆட்சியைக் கலைக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது: தம்பிதுரை பேட்டி

ஆட்சியைக் கவிழ்க்க திமுக திட்டமிடுகிறது. ஜெயலலிதாவின் ஆட்சியைக் கலைக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது என்று தம்பிதுரை கூறியுள்ளார்.

EIS
EnGeniusInc

அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை ஆளுநர் வித்யா சாகர் ராவை இன்று சென்னை ராஜ்பவனில் சந்தித்துப் பேசினார்.

அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் தம்பிதுரை கூறியதாவது: ”மரியாதை நிமித்தமாகவே ஆளுநரை சந்தித்தேன்.

அதிமுக ஆள்வதற்காகவே மக்கள் வாக்களித்துள்ளனர். தமிழகத்தில் அதிமுக ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆட்சியைக் கவிழ்க்க திமுக திட்டமிடுகிறது. ஜெயலலிதாவின் ஆட்சியைக் கலைக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது.

அதிமுகவில் அணிகள் என்பதே கிடையாது. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள் தனி அணியாக செயல்பட முடியாது. மீறி செயல்பட்டால் பதவி பறிபோய்விடும் என்பது அவர்களுக்குத் தெரியும். அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளனர்.

இந்த ஆட்சியைக் காப்பாற்றுவதே எங்கள் நோக்கம். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி மீதமுள்ள 4 ஆண்டுகளை பூர்த்தி செய்யும். பேச்சுவார்த்தைக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான பேச்சுவார்த்தை குழு கலைக்கப்படவில்லை. ஓபிஎஸ் குழு கலைத்தாலும், பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறோம்.

வீடியோ காட்சியை எம்.எல்.ஏ. சரவணன் மறுத்துள்ளார். எம்.ஏல்.ஏக்களிடம் குதிரை பேரம் நடக்கவில்லை. ஸ்டாலின் ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று நினைக்கிறார். அவரின் முதல்வர் கனவு பலிக்காது” என்றார் தம்பிதுரை.

Charter Global
InfoSmart
Swapna
InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

In RK Nagar support increases for DMK – former minister KN Nehru

Read More →