ஆர்.கே.நகர் தேர்தல்: தினகரன், மசூசூதனன், மருதுகணேஷ், தீபா, கங்கை அமரன் வேட்பு மனுக்கள் ஏற்பு
மரணம் அடைந்ததையடுத்து காலியாக இருக்கும் சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த நிலையில், 127 பேர் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனுக்கள் அளித்திருந்தனர்.
இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. இதில், முக்கிய கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ், ‘அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா’ வேட்பாளர் மதுசூதனன், தே.மு.தி.க. வேட்பாளர் மதிவாணன், பா.ஜ.க. வேட்பாளர் கங்கை அமரன், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
அ.தி.மு.க. அம்மா கட்சி சார்பில் மனு தாக்கல் செய்த டிடிவி தினகரனின் வேட்பு மனுவை ஏற்கக் கூடாது என தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ் ஆட்சேபம் தெரிவித்தார். தினகரன் மீது அந்நிய செலாவணி மோசடி வழக்கு உள்ளதால் அதனை சுட்டிக் காட்டி அவரது வேட்பு மனுவை ஏற்கக் கூடாது மருதுகணேஷ் வாதிட்டார். இதனால், தினகரன் வேட்பு மனுவை ஏற்பதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர், இதுதொடர்பாக ஆலோசனை நடத்திய தேர்தல் அதிகாரிகள், தினகரனின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவித்தனர்.
முன்னதாக சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் அந்தோணி சேவியரின்மனுவும், மாற்று வேட்பாளர் மனுவும் நிராகரிக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த சமத்துவ மக்கள் கட்சியினர், எதிர்ப்பு கோஷமிட்டனர். அப்போது அவர்களை கட்டுப்படுத்த முயன்ற போலீஸ் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.