Loading...
You are here:  Home  >  Politics  >  Delhi Politics  >  Current Article

Not only  Modi, Kejriwal  will have a place in Madame  Tussauds  Wax Museum

By   /  March 22, 2016  /  Comments Off on Not only  Modi, Kejriwal  will have a place in Madame  Tussauds  Wax Museum

    Print       Email

உலகப் புகழ்பெற்ற மேடம் துஸ்ஸாட்ஸின் மெழுகுச்சிலை மியூசியத்தில் கேஜ்ரிவாலுக்கு சிலை.

Madame-Tussaud-Royal-Family-615x350

InCorpTaxAct
Suvidha

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உலகப் புகழ்பெற்ற மேடம் தவுசட்சின் மெழுகு சிலை மியூசியம் உள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரபல அரசியல் தலைவர்கள் மெழுகு சிலைகள் இந்த மியூசியத்தில் இடம் பெற் றுள்ளன. இந்த மியூசியத்தில் தங்கள் மெழுகு சிலைகள் இருப்பதை உலகத் தலைவர் களும் கவுரவமாக கருதுகி றார்கள்.

இந்த மெழுகு சிலை மியூசியத்தின் கிளை ஒன்று டெல்லியில் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த மியூசியம் அடுத்த ஆண்டு திறக்கப்பட உள்ளது.

இதற்கிடையே லண்டனில் உள்ள மியூசியத்தில் பிரதமர் நரேந்திர மோடி சிலை அடுத்த மாதம் இடம் பெற உள்ளது. மோடி போன்று அச்ச அசலாக இருக்கும் அந்த சிலை தயாராகி விட்டது.

பிரதமர் மோடியைத் தொடர்ந்து டெல்லி முதல்–மந்திரி கெஜ்ரிவாலின் மெழுகு சிலையையும் மியூசியத்தில் வைக்க மியூசியம் மைய நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக கெஜ்ரிவாலிடம் அனுமதி கடிதம் கொடுக்கப்பட்டது.

அதை கெஜ்ரிவால் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து கெஜ்ரிவாலின் மெழுகுசிலை தயாராக உள்ளது. இதற்காக கெஜ்ரிவாலை அளவெடுக் கும் பணி அடுத்த மாதம் முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள மாநில முதல்–மந்திரிகளில் மெழுகுசிலை மியூசியத்தில் இடம் பெறப்போகும் முதல் முதல்–மந்திரி கெஜ்ரி வால்ArvindKejriwal-presser_PTI2 தான் என்பது குறிப்பிடத் தக்கது.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →