Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Nothing concrete visible during 2 years of Modi govt: Says Lalu Prasad Yadav

By   /  May 27, 2016  /  Comments Off on Nothing concrete visible during 2 years of Modi govt: Says Lalu Prasad Yadav

    Print       Email

lalu-prasad-yadav (1)மோடியின் இரண்டு ஆண்டு ஆட்சியில் சாதனைகள் ஒன்றுமில்லை;  லாலு பிரசாத் கருத்து.

பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டு ஆண்டு கால ஆட்சியில் சாதனைகள் ஒன்றுமில்லை என்று ராஷ்டிர ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.

InCorpTaxAct
Suvidha

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்று, இன்றுடன் (வியாழக்கிழமை) இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது.

மத்திய அரசின் கடந்த 2 ஆண்டு கால ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகளை நாடு முழுவதும் விளக்க பாஜக அரசு முடிவு செய்தது. அதன்படி, இன்று (மே 26) முதல் ஜூன் 15-ம் தேதி வரை ‘விகாஸ் பர்வ்’ என்ற 21 நாள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக ஒரு மத்திய அமைச்சர், மத்திய இணையமைச்சர் இடம்பெற்ற 33 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் தனித்தனியாக பிரிந்து நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்ட 200 முக்கிய மையங்களுக்கு சென்று மத்திய அரசின் சாதனைகளை விளக்கவுள்ளனர்.

மோடியின் இரண்டு ஆண்டு கால ஆட்சி குறித்து காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு முக்கிய கட்சிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், மோடியின் இரண்டு ஆண்டு கால ஆட்சியில் சாதனைகள் ஒன்றுமில்லை என்று ராஷ்டிர ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற மோடி அரசு தவறியுள்ளது. அதேபோல், அரசியலமைப்பு சட்டத்தின் மாண்பை பாதுகாக்கும் வகையிலும் மத்திய அரசு செயல்படவில்லை.

தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தொழிலதிபர்களின் நலன்களுக்காக செயல்படுகிறது. கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளை புறக்கணிக்கிறது.

முதல் முறையாக பிரதமர் வேட்பாளர் ஒருவர் தன்னுடைய ஜாதியை சொல்லி, டீ விற்பதாக சொல்லி ஆட்சியை பிடித்துள்ளார்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →