Loading...
You are here:  Home  >  Movies  >  Bollywood  >  Current Article

Nothing  wrong  in  acting  kissing  scenes  after  marriage – says  Kareena  Kapoor.

By   /  March 7, 2016  /  Comments Off on Nothing  wrong  in  acting  kissing  scenes  after  marriage – says  Kareena  Kapoor.

    Print       Email

திருமணத்துக்குப் பிறகு நடிகைகள் முத்தக் காட்சிகளில் நடிப்பதில் தவறு இல்லை – கரீனா கபூர் சொல்கிறார்.311840-kareena-daboo

கரீனா கபூருக்கும் சயீப் அலிகானுக்கும் 2012ல் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகும் இந்திப் படங்களில் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கிறார்கள். திரமணமானதும் கரீனா கபூர் தன்னிடம் கதை சொல்ல வந்த டைரக்டர்களிடம் சில நிபந்தனைகள் விதித்தார். இனிமேல் கவர்ச்சி மற்றும் உதட்டோடு உதடு சேர்ந்த முத்தக் காட்சிகள் போன்றவற்றில் நடிக்கமாட்டேன் ஆடைக்குறைப்பு செய்ய மாட்டேன் என்று கூறினார்.

InCorpTaxAct
Suvidha

அப்படியே நடித்தும் வந்தார். ஆனால் தற்போது அவரிடம் திடீரென்று மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. கவர்ச்சி காட்சிகளில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அர்ஜூன்கபூர் ஜோடியாக நடிக்கும் ‘கி அன்ட் கா’ என்ற இந்திப் படத்தில் உதட்டோடு உதடு முத்தக் காட்சியில் நடித்து பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார்.

முத்தக் காட்சி நிபந்தனைகளைத் தளர்த்தியது குறித்து கரீனா கபூர் அளித்த பேட்டி வருமாறு ; “திருமணமானதும் முத்தக் காட்சியில் நடிப்பது இல்லை என்று முடிவு செய்திருந்தேன். சயீப் அலிகான் எனக்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்கவில்லை. நானாகத்தான் அந்த முடிவை எடுத்திருந்தேன். ஆனால் திருமணம் முடிந்ததும் இருந்த மனநிலை இப்போது எனக்கு இல்லை. அறிவில் முதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. எனவேதான் அர்ஜூன்கபூருடன் முத்தக் காட்சியில் நடிக்க சம்மதித்தேன்.

முத்தக் காட்சிகளில் நடிப்பதற்கு சயீப் அலிகானும் எனக்கு சம்மதம் தெரிவித்துவிட்டார். கதைக்குத் தேவைப்படும் நிலையில் டைரக்டர் கேட்டுக்கொண்டால் முத்தக் காட்சியில் தாராளமாக நடிக்கலாம் என்று அவர் கூறிவிட்டார். அதனால்தான் இந்தப் படத்தில் தைரியமான முத்தக் காட்சியில் நடித்திருக்கிறேன். சயீப் அலிகான் முத்தக் காட்சியில் நடித்தால்கூட நான் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டேன். திருமணமான நடிகைகள் முத்தக் காட்சிகளில் நடிப்பது தவறு இல்லை”  இவ்வாறு கரீனா கபூர் கூறினார்.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →