Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

NR Congress MLA’s supporters siege Pondicherry CM’s house.

By   /  April 28, 2016  /  Comments Off on NR Congress MLA’s supporters siege Pondicherry CM’s house.

    Print       Email

201604281329135457_Rangaswamy-home-NR-Cong-MLA-Supporters-Siege_SECVPF
வாய்ப்பு கேட்டு என்ஆர் காங் எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் முதல்வர் ரங்கசாமி வீட்டை முற்றுகை.

புதுவையில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளிலும் ஆளும் கட்சியான என்.ஆர். காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது.

InCorpTaxAct
Suvidha

இதில், 21 தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. 9 தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இதில், எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், வைத்தியநாதன், கார்த்திகேயன் ஆகியோர் தொகுதிகளும் அடங்கும்.

Puducherry-Chief-Minister-N-Rangasamyஇவர்களுக்கு டிக்கெட் கொடுக்க விருப்பம் இல்லாமல் தான் முதல்-அமைச்சர் ரங்கசாமி இவர்களின் பெயர்களை வேட்பாளர்கள் பட்டியலில் வெளியிடவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் காலாப்பட்டு தொகுதி எம்.எல்.ஏ.வான கல்யாணசுந்தரம் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் இன்று தொகுதியில் இருந்து திரண்டு கதிர்காமத்தில் உள்ள ரங்கசாமியின் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் வந்தபோது அங்கு ரங்கசாமி இல்லை. இதனால் வீட்டை முற்றுகையிட்டனர்.

கல்யாணசுந்தரத்தை வேட்பாளராக அறிவிக்கும் வரை இந்த இடத்தை விட்டு செல்ல மாட்டோம் என அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது பல பெண்கள் கதறி அழுதனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

பிரச்சினை ஏதும் நடைபெறாமல் தடுக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →