Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

NSG protection might be withdrawn for Karunanidhi.

By   /  June 25, 2016  /  Comments Off on NSG protection might be withdrawn for Karunanidhi.

    Print       Email

nsgகருணாநிதிக்கு என்எஸ்ஜி பாதுகாப்பு விலக்கப்படுமா?

நாட்டில் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகம் உள்ள தலைவர்களுக்கு தேசிய படை பிரிவுகள் பாதுகாப்பு அளித்து வருகின்றன.

InCorpTaxAct
Suvidha

பிரதமர், முன்னாள் பிரதமர் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்களுக்கு மத்திய அரசின் சிறப்பு பாதுகாப்பு பிரிவு (எஸ்.பி.ஜி) பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. மற்ற தலைவர்களுக்கு இசட் பிளஸ், இசட், ஒய், எக்ஸ் ஆகிய பல்வேறு பிரிவுகளில் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

இதில் இசட் பிளஸ் பாதுகாப்பில் உள்ளவர்களுக்கு தேசிய பாதுகாப்பு படை (என்.எஸ்.ஜி) பிரிவினர் பாதுகாப்பு அளிப்பார்கள். இந்த வகையில் முன்னாள் துணை பிரதமர் அத்வானி, உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங், காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட 15 தலைவர்களுக்கு தேசிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆகியோருக்கும் இந்த வகை பாதுகாப்பு வழங்கப்படுகிறது. மு.க.ஸ்டாலினுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவது சம்மந்தமாக ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு செய்து முடிவு எடுக்கப்படும். அவர்களுக்கு எந்த வகையில் அச்சுறுத்தல் உள்ளது என்பது பற்றி ஆய்வு செய்து பாதுகாப்பை அதிகப்படுத்துவதா? அல்லது குறைப்பதா? என்பது பற்றி முடிவு செய்வார்கள்.

கடந்த வாரம் இது சம்மந்தமான ஆய்வு உள்துறை செயலாளர் ராஜீவ்மகரிஷி தலைமையில் நடைபெற்றது. அப்போது உத்தரபிரதேச முதல்-மந்திரி அகிலேஷ்யாதவ், தி.மு.க.தலைவர் கருணாநிதி, அசாம் மாநில முன்னாள் முதல்-மந்திரி தருண்கோகாய், ராஷ்டிரிய ஜனதா தலைவர் லல்லுபிரசாத் ஆகியோருக்கு தேசிய பாதுகாப்பு படை (என்.எஸ்.ஜி.) பாதுகாப்பில் இருந்து விடுவித்துக் கொள்ளலாம். இதற்கு பதிலாக அதற்கு அடுத்து வகையான பாதுகாப்பு வழங்கலாம் என முடிவு செய்துள்ளனர்.

இது சம்மந்தமான கோப்பு மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கிடம் சென்றுள்ளது. அவர் இது பற்றி இறுதி முடிவு எடுப்பார்.

இசட் பிளஸ் பிரிவின்படி தேசிய பாதுகாப்பு படையின் பாதுகாப்பில் உள்ளவர்களுக்கு ஒரு குண்டு துளைக்காத கார், 2 பாதுகாப்பு வாகனம், 40 போலீசார் பாதுகாப்பு வழங்கப்படும். இது இசட் பிரிவுக்கு மாற்றப்பட்டால் மத்திய ரிசர்வ் படையினர் பாதுகாப்பை ஏற்றுக்கொள்வார்கள். இந்த படையில் 28 போலீசார் இடம்பெற்று இருப்பார்கள்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →