2016-2017ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் புதியவரிகள் ஏதும் இல்லை. நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று 2016-2017-ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை.
2016-2017-ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையில் சிறைச்சாலை துறைக்கு ரூ.282.92 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறைக்கு ரூ.9073 கோடி, பள்ளி கல்வித்துறைக்கு ரூ.24,130 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தீயணைப்புத்துறைக்கு ரூ.230.7 கோடி, வருவாய்த்துறைக்கு ரூ.5600 கோடி, சமூகல நலத்துறைக்கு ரூ.4512.32 கோடி, தோட்டக்கலைத்துறைக்கு ரூ.511 கோடி, கால்நடை பராமரிப்புத்துறைக்கு ரூ.1188.17 கோடி, ஊரக வளர்ச்சிதுறைக்கு ரூ21,186 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பண்ணை இயந்திரமயமாக்கல் திட்டத்துக்கு ரூ.100 கோடி, உழவர் பாதுகாப்பு திட்டத்துக்கு ரூ.206 கோடி, இலவச ஆடு, மாடு வழங்க ரூ.182 கோடி, தாழ்த்தப்பட்ட பழங்குடி மாணவர்கள் கல்வி உதவி தொகைக்கு ரூ.1429.94 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பெண் எழுத்தாளர்களுக்கான ‘அம்மா இலக்கிய விருது’ உலகளவில் சிறந்த தமிழறிஞர்களுக்கான உலகத் தமிழ்ச் சங்க விருது, சிறந்த மொழி பெயர்ப்பாளர்களுக்கான சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருது ஆகிய விருதுகள் ஏற்கனவே அறிவித்தபடி இந்த ஆண்டு முதல் வழங்கப்படும்.
2016-2017-ம் ஆண்டு திருத்த வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில், தமிழ் வளர்ச்சித் துறைக்கு 32.94 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2016-2017-ம் ஆண்டு திருத்த வரவு- செலவு திட்ட மதிப்பீடுகளில் சாலைப் பாதுகாப்பு நிதிக்காக, மொத்தம் 165 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், அதிக அளவில் விபத்துக்கள் நிகழக்கூடிய இடங்களில், சாலைக் குறைபாடுகளைச் சரி செய்ய, ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், சாலைப் பாதுகாப்பிற்கென தனியாக 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.