Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Opposition likely to skip Mamata Banerjee’s Swearing In Ceremony

By   /  May 24, 2016  /  Comments Off on Opposition likely to skip Mamata Banerjee’s Swearing In Ceremony

    Print       Email

மம்தா பானர்ஜி பதவியேற்பு விழாவை பறக்கணிக்க எதிர்க்கட்சிகள் திட்டம்.tmc-mps-to-visit-khandwa-bjp-says-it-shows-mamatas-nervousness_170614110445

வரும் மே 27-ம் தேதி நடைபெறும் மம்தா பானர்ஜி பதவியேற்பு விழா நிகழ்ச்சியை அம்மாநில எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க திட்டமிட்டுள்ளன.

InCorpTaxAct
Suvidha

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்று, ஆட்சியை மீண்டும் தக்கவைத்துக் கொண்டது. இதையடுத்து வரும் 27-ம் தேதி(வெள்ளிக்கிழமை) அம்மாநிலத்தின் முதல்வராக மம்தா பானர்ஜி 2-வது முறையாக பதவியேற்கிறார்.

இவ்விழாவில் பங்கேற்கும்படி இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சோனியா காந்தி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா, பூட்டான் பிரதமர் ஷெரிங் தோப்கே, உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மம்தா பானர்ஜியின் பதவியேற்பு விழா நிகழ்ச்சியை இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தங்கள் கட்சியினர் மீது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் மாநிலம் முழுவதும் நடத்தி வரும் தாக்குதல்களே காரணம் என்று கூறப்படுகிறது. நானூர் தொகுதியில் சிபிஎம் கட்சியின் வெற்றிக்கு உதவிய தினசரி ஊழியரான கோகோன் ஷேயிக் என்பவர் திங்கட்கிழமை காலை சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதனையடுத்து ஷேக்கின் உள்ளூர் ஆதரவாளர்கள் திரிணாமூல் காங்கிரஸ் அலுவலகத்திற்கு தீ வைத்தனர். இதனால் இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் திரிணாமூல் காங்கிரசுக்கு உரசல் ஏற்பட்டுள்ளது.

தங்கள் கட்சியினர் மீது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் தாக்குதலில் ஈடுபடுவதாகவும், அதனை தடுத்து நிறுத்த உதவ வேண்டும் என்றும் இடதுசாரி மற்றும் காங்கிரஸ் சார்பில் ஆளுநரிடம் முறையிடப்பட்டது.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →