Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

OPS meet Modi at Delhi: says ‘no difference with EPS’

By   /  October 12, 2017  /  Comments Off on OPS meet Modi at Delhi: says ‘no difference with EPS’

    Print       Email

டெல்லி சென்று மோடியை சந்தித்தார் ஓபிஎஸ். முதல்வருடன் கருத்துவேறு பாடு உள்ளதாக கணிப்பு.

 

EIS
EnGeniusInc

 

தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ். நேற்று தனது ஆதரவாளர்களுடன் டெல்லி சென்றார். அங்கு பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தெரிவித்திருந்தார். ஓபிஎஸ் உடன் அவரது ஆதரவாளர்கள் மைத்ரேயன், கே.பி.முனுசாமி ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.
துணை முதல்வர் ஓ.பி.எஸ் டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு இன்று காலை சென்றார். அங்கு அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்
அ.தி.மு.க.வின் சின்னம் குறித்த விசாரணை தேர்தல் ஆணையத்தில் உள்ள நிலையில், ஓ.பி.எஸ்.-ன் டெல்லி பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக பிரதமர் மோடியை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

அதன்பின்னர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். முதல்வர் பழனிசாமியுடன் எனக்கு எந்த மன வருத்தமும் இல்லை. கட்சியிலும் ஆட்சியிலும் எங்கள் அணியினர் ஓரங்கட்டப்படுவதாக கூறப்படுவது உண்மையில்லை.

எந்தவித நிபந்தனைகளும் இன்றி இரு அணிகளும் இணைந்துள்ளன. அதிமுகவில் இனி பிளவு என்ற பேச்சுக்கே இடமில்லை. கீழ்மட்ட அளவில் இருந்து உழைத்து வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

பிரதமர் மோடியுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை. தமிழக வளர்ச்சி குறித்த கோரிக்கை மனு பிரதமரிடம் அளிக்கப்பட்டுள்ளது.

மின்சார தேவைக்கான நிலக்கரி பற்றாக்குறை குறித்து முதல்வர் பழனிசாமி வழங்கிய கடிதத்தை பிரதமரிடம் வழங்கினேன். உடனடியாக தமிழகத்துக்கு தேவைப்படும் நிலக்கரியை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளேன்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தொடர்பான தடுப்பு பணிகள் குறித்து பிரதமரிடம் எடுத்துரைத்தோம். டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் ஓரளவு வெற்றிபெற்றுள்ளது. மத்திய அரசின் மருத்துவக் குழு தமிழகத்திற்கும் வரும் என பிரதமர் உறுதியளித்துள்ளார்.

மேலும், துணை முதல்வராக பொறுப்பேற்றதற்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், இணைப்பின்போது தமக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்பது பற்றியும் அவர் பிரதமரிடம் விவாதித்ததாகத் தெரிகிறது.

Charter Global
InfoSmart
Swapna
InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

In RK Nagar support increases for DMK – former minister KN Nehru

Read More →