பழ. கருப்பையா, கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் சென்னை துறைமுகம் தொகு தியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பழ.கருப்பையா. சில மாதங்களுக்கு முன்பு சென்னை யில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆளுங்கட்சியான அதிமுகவுக்கு எதிராக சில கருத்துகளை கூறி யதால் கட்சியில் இருந்து நீக்கப் பட்டார். அண்மையில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பழ.க ருப்பையா பேசி வந்தார்.
இந்நிலையில், நேற்று மாலை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதியை பழ. கருப்பையா சந்தித்து, அவரது முன்னிலையில் தன்னை திமுக வில் இணைத்துக் கொண்டார்.
இதுகுறித்து பழ.கருப் பையா கூறியதாவது: அதிமுக தலைமை என்னை கட்சியை விட்டு நீக்கியபோது, ஜெயலலிதா அளித்த பதவியை அவரிடமே கொடுத்துவிட்டு வந்தேன். அந்த நாள் முதல் எனது மனம் கருணா நிதி, அன்ப ழகன், மு.க.ஸ்டாலினை சுற்றித்தான் வந்தது. ‘ரோமாபுரி பாண்டியன்’ விழாவின்போது நான் திமுகவில் இணைய வேண் டும் என்று கரு ணாநிதி அழைத் தார். மனதளவில் திமுகவில் உள்ளதாக அப்போது கூறினேன். இன்றைக்கு மனதளவிலும், வாக்களவிலும், செயலளவிலும் திமுகவில் இணைந்துவிட்டேன்.
சுதந் திரத்துக்கு முன்பு செயல்பட்ட துபோல, தற்போதும் திராவிட இயக்கம் செயல்பட வேண்டிய தேவையுள்ளது. எனவே, திராவிட இயக்கத்தை பெரியாரோடும் அண்ணாவுடனும் இருந்து வழிந டத்திய கருணாநிதி தலைமையை ஏற்று திமுகவில் இணைந்துள்ளேன் என்றார்.
ஆரம்பத்தில் காங்கிரஸில் இருந்த பழ.கருப்பையா, 1988-ல் திமுகவில் இணைந்தார். பின்னர் மதிமுக, காங்கிரஸ் ஆகிய கட்சி களில் இருந்த இவர் 2010-ல் அதிமுகவில் இணைந்தார். இப்போது நீக்கப்பட்ட நிலையில், திமுகவில் இணைந்துள்ளார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.