Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

Panneer Selvam wants Deepa to join their faction. Deepa demands Gen. Sec post.

By   /  March 22, 2017  /  Comments Off on Panneer Selvam wants Deepa to join their faction. Deepa demands Gen. Sec post.

    Print       Email

deepa-15-1487127765தீபாவுடன் இணைந்து செயல்பட பன்னீர் செல்வம் அணி ரகசிய பேச்சு வார்த்தை. பொதுச்செயலாளர் பதவி கேட்கிறார் தீபா.

 

InCorpTaxAct
Suvidha

 

ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அ.தி.மு.க.வில் அதிரடி மாற்றங்களும், பிளவுகளும் ஏற்பட்டுள்ளன.

முதல்-அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் பதவி பறிக்கப்பட்டு அந்த பதவிக்கு சசிகலா குறி வைத்தார். இதையடுத்து சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். சசிகலாவின் குடும்பத்திற்கு எதிராக குரல் கொடுத்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் தனி அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார்.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டு அவர் சிறைக்கு சென்ற பிறகு ஓ.பன்னீர் செல்வமும், தீபாவும் ஜெயலலிதா சமாதியில் சந்தித்து பேசினார்கள். அப்போது அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர் செல்வமும், நானும் இரு கரங்களாக இணைந்து செயல்படுவோம் என்று தீபா அறிவித்தார்.

இதனால் சசிகலாவுக்கு எதிராக இருவரும் ஒன்றாக இணைந்து அரசியல் பாதையில் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கு தீபா பேரவையில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைந்து செயல்படும் முடிவை கைவிட்ட தீபா தனி அமைப்பை தொடங்கினார்.

ஆர்.கே.நகர் தொகுதியிலும் அவர் களம் இறங்கியுள்ளார். இருப்பினும் தீபாவுடன் இணைந்து செயல்பட்டால் சசிகலாவை வீழ்த்துவது மிகவும் எளிதாக இருக்கும் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கருதுகிறார்கள்.

இதன் காரணமாக தீபாவுடன் ஓ.பி.எஸ். அணியினர் தொடர்ந்து ரகசியமாக பேச்சு நடத்தி வருகிறார்கள். தீபா தனியாக பேரவையை தொடங்கிய நிலையிலும் எப்படியும் அவரை தங்கள் பக்கம் இழுத்து வந்துவிட வேண்டும் என்பதில் ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள்.

தங்கள் அணிக்கு தீபா வரும் பட்சத்தில் அவருக்கு முக்கியத்துவம் அளிப்பதுடன் அவரது ஆதரவாளர்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் தரவும் ஓ.பன்னீர் செல்வம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

ஓ.பி.எஸ். அணியில் பொதுச்செயலாளர் பதவியை குறி வைத்து தீபா காய் நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே தீபாவுடன் நடக்கும் பேச்சுவார்த்தை முடிவுக்கு வராமல் இழுபறி நிலை நீடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருப்பினும் தீபாவின் மனதை மாற்றி எப்படியும் தங்கள் அணிக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் முனைப்பு காட்டி வருகிறார்கள்.

இதற்காக பொதுச்செயலாளர் பதவியை தீபாவுக்கு விட்டு தரவும் அவர்கள் இறங்கி வருவார்கள் என்று தெரிகிறது. இதன் மூலம் தீபாவுடன் ஓ.பி.எஸ். அணியினர் நடத்தும் இந்த ரகசிய பேச்சுவார்த்தை விரைவில் முடிவுக்கு வரும் என்றும் இரு அணிகளும் இணைந்து செயல்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் தீபா ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →