Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Parikkar conducts aerial survey in search operation.

By   /  July 23, 2016  /  Comments Off on Parikkar conducts aerial survey in search operation.

    Print       Email

parikarமாயமான விமானத்தைத் தேடும் பணியில் மத்திய அமைச்சர் பரிக்கர்; ஹெலிகாப்டரில் சென்று மேற்பார்வை.

சென்னையில் இருந்து நேற்று காலை அந்தமான் நோக்கி 29 பேருடன் புறப்பட்டுச் சென்ற இந்திய விமானப்படைக்கு சொந்தமான ‘ஏ.என்.-32’ ரக விமானம் வங்காள விரிகுடா கடற்பகுதிக்கு மேலே பறந்தபோது திடீரென மாயமானது.

InCorpTaxAct
Suvidha

விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து சிக்னல் வருகிறதா என்பதை கண்டறிய, நீர்மூழ்கி கப்பலும் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 200 கடல் மைல் தொலைவில் தேடும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது.

நேற்று காலை சுமார் 8.30 மணியளவில் தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டு சென்ற இந்த விமானம் காலை 11.30 மணியளவில் அந்தமானின் போர்ட் பிளைர் நகரை சென்றடையும் என எதிர்பார்க்கப்பட்டது.

விமானம் புறப்பட்ட சுமார் 15 நிமிடங்களுக்கு பிறகு 23 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது தரையில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடனான அவ்விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மோசமான வானிலை காரணமாக அந்த விமானம் திசைமாறிச் சென்று விபத்தில் சிக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்திய விமானப்படையின் 5 விமானங்கள் மற்றும் கடலோர காவல்படையின் 13 கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல் மூலம் விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழக கடலோர காவல் படையும் இப்பணியில் இணைந்துள்ளது.

இந்நிலையில், தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை நேரில் பார்வையிட்டு துரிதப்படுத்துவதற்காக பாதுகாப்புத்துறை மந்திரி மனோகர் பரிக்கர் டெல்லியில் இருந்து இன்று சென்னை வந்தார். டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் தாம்பரம் விமானப்படை தளத்தை வந்தடைந்தார்.

தேடுதல் பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக ராணுவ அதிகாரிகள் அவரிடம் விளக்கம் அளித்தனர். அங்கிருந்து விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் வேட்டை நடந்துவரும் வங்காள விரிகுடா கடல் பகுதியை மனோகர் பரிக்கர் பார்வையிட்டார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →