வங்காள தேசத்திற்கும் இந்தியாவுக்கும் இடையேயான பயணிகள் ரயில்; மோடி ஷேக்ஹசீனா கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா நான்கு நாள் அரசு முறைப் பயணமாக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் தனது குழுவினருடன் இன்று பிரதமர் மோடியை சந்தித்து இரு நாட்டு உறவுகள் மற்றும் சர்வதேச பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்குமிடையே 22 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதற்கிடையே, இந்தியா-வங்காளதேச உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இரு நாடுகளுக்குமிடையே பயணிகள் ரெயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வங்காளதேசத்தின் குல்னா நகருக்கும், மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகருக்கும் இடையே இயக்கப்பட உள்ள இந்த ரெயில் இன்று வெள்ளோட்டம் விடப்பட்டது. பெத்ராபோல் எல்லை வரை ரெயில் இயக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
இந்த ரெயிலை, டெல்லியில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்திய பிரதமர் மோடி, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். வெள்ளோட்டம் முடிந்ததும் கொல்கத்தா-குல்னா இடையே வழக்கமான பயணிகள் ரெயில் சேவை ஜூலை மாதம் தொடங்கும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பெத்ராபோல் எல்லை வழியாக செல்லக்கூடிய இந்தியா-வங்காளதேச ரெயில் பாதையானது, கடந்த 2001ம் ஆண்டு சரக்கு ரெயில் போக்குவரத்திற்காக மீண்டும் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.