Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Pavan Kalyan to act two remakes of Ajith.

By   /  May 7, 2016  /  Comments Off on Pavan Kalyan to act two remakes of Ajith.

    Print       Email

ajithpawan_2840852fஅஜீத் நடித்த இரு படங்களின் ரீமேக்கில் நடிக்கிறார் பவன் கல்யாண்

‘வீரம்’ மற்றும் ‘வேதாளம்’ ஆகிய அஜித் படங்களின் ரீமேக்கில் நடிக்க பவன் கல்யாண் முடிவு செய்திருக்கிறார்.

InCorpTaxAct
Suvidha

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் பெரும் வசூலைக் குவித்த படங்கள் ‘வீரம்’ மற்றும் ‘வேதாளம்’. இவ்விரண்டு படங்களின் ரீமேக் உரிமை குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தது.

இப்பேச்சுவார்த்தையின் இறுதியில் இரண்டு படங்களின் ரீமேக்கிலும் பவன் கல்யாண் நடிப்பது உறுதியாகி இருக்கிறது.

அண்மையில், எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் பவன் கல்யாண் நடிக்கும் படத்தின் பூஜை நடந்தது. அப்படம் ‘வீரம்’ ரீமேக் என்று தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகுக்கு ஏற்றவாறு கதையில் சில மாற்றங்களைச் செய்திருக்கிறார்கள்.

அதனைத் தொடர்ந்து உருவாகும் ‘வேதாளம்’ படத்தின் ரீமேக்கிலும் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை ‘ஜில்லா’ படத்தின் இயக்குநர் நேசன் இயக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். ஏ.எம்.ரத்னம் தயாரிக்க இருக்கிறார்.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நாயகனான பவன் கல்யாண், அஜித் படங்களை ரீமேக் செய்ய இருப்பதால் அவருடைய ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →