ரூ 3 லட்சத்துக்குமேல் பணம் ரொக்கப் பணம் வாங்குபவர்களுக்கு அதே அளவு அபராதம் விதிக்கப்படும் – வருவாய்த்துறை.
நாட்டில் கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுக்களை கட்டுப்படுத்தும் வகையில் உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. அதேபோல், ரொக்கப் பரிமாற்றத்துக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.
அவ்வகையில், ரூ.3 லட்சத்துக்கு அதிகமான ரொக்கப் பரிமாற்றத்துக்கு தடை விதிக்கப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. எனவே, ரூ.3 லட்சத்துக்கும் அதிகமாக ரொக்கப் பரிமாற்றம் செய்வோர் அதிக அளவிலான அபராதம் கட்டவேண்டி வரும். இந்த நடைமுறை ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இந்நிலையில், வருவாய்த்துறை செயரலாளர் ஹஸ்முக ஆதியா இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ரூ.3 லட்சத்துக்கும் அதிகமான ரொக்கப் பரிமாற்றத்துக்கு அதிக அளவில் அபராதம் விதிக்கப்படும், பணம் பெறுவோருக்கு அதே அளவிலான தொகை அபராதமாக விதிக்கப்படும் என்றார்.
“உதாரணமாக நீங்கள் 4 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிமாற்றம் செய்தால் அதே அளவுக்கு அதாவது 4 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். 50 லட்சம் ரூபாய் பரிமாற்றம் செய்தால் அபராதமும் 50 லட்சம் ரூபாயாக இருக்கும்.
எனவே, யாராவது விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை ரொக்கமாக கொடுத்து வாங்கினால், விற்பனை செய்யும் கடைக்காரரும் வரி செலுத்த வேண்டும். இந்த நடைமுறை பெரிய அளவிலான ரொக்க பரிமாற்றத்தை தடுக்க முடியும். பண மதிப்பிழப்பு நடவடிக்கையானது கருப்பு பணத்தை கணக்கிற்கு கொண்டு வந்துள்ளது. வருங்கால தலைமுறையிலும் கருப்பு பணத்தை தடுக்க அரசு இப்போது விரும்புகிறது” என்றார் வருவாய்த்துறை செயலாளர்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.