Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Peter Alphones & Viswanathan joins Congress : says not contesting election.

By   /  April 13, 2016  /  Comments Off on Peter Alphones & Viswanathan joins Congress : says not contesting election.

    Print       Email

201604131431097796_While-it-likely-will-not-contest-elections-Peter-Alphonse_SECVPFபீட்டர் அல்போன்ஸ் மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் காங்கிரஸில் இணைந்தனர். தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அறிவிப்பு.

காங்கிரசில் இணைந்த பீட்டர் அல்போன்ஸ், விஸ்வநாதன் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது:–

InCorpTaxAct
Suvidha

பா.ஜனதா தலைவர்கள் தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சியை கர்வாப்சி என்று கூறுவார்கள். அதே போல நாங்கள் இன்று அரசியல் தாய் மதம் திரும்பி இருக்கிறோம். அரசியல் தவறுகளை திருத்தி இருக்கிறோம். காங்கிரசில் ஒவ்வொரு தலைவர்கள் பின்னாலும் சரித்திரம் இருக்கிறது. நாங்கள் பிறப்பால், வளர்ப்பால் வாழ்க்கையால் காங்கிரஸ்காரர்கள்.

ராகுல்காந்தி பிரதமராக வரவேண்டும். அதற்காக உழைப்போம். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் காங்கிரசில் இணைந்து இருக்கிறோம்.

ஜி.கே.வாசன் காங்கிரசை விட்டு வெகு தூரம் சென்று விட்டோம் என்று கூறியது எங்களுக்கு உடன்பாடு இல்லை. காங்கிரசில் இருந்து அந்நியப்படுவதை விரும்பவில்லை. நாங்கள் த.மா.கா.வுக்கு சென்று இருந்தாலும் காங்கிரசை விட்டு வெளியே போக வில்லை என்ற உணர்வுடன் தான் இருந்தோம்.

கூட்டணி தொடர்பாக ஜி.கே.வாசன் எங்களிடம் கருத்து கேட்ட போது காமராஜர் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற லட்சியம் நிறைவேறுமா? இந்த கூட்டணியில் சேர்வதால் த.மா.கா.வுக்கு பலன் என்ன? என்பதை பற்றி யோசிக்க கூறினோம். முடிவு எடுக்க வேண்டிய உரிமை அவரிடம் உள்ளது. அதை ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் எங்கள் உரிமை. ஏற்றுக் கொள்ளாததால் நாங்கள் வெளியே வந்து விட்டோம். தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும்.

சில தொகுதிகளை மாற்றி கேட்பதாக நீங்கள் சொல்கிறீர்கள். அது பற்றி எனக்கு தெரியாது. நாங்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கேட்கவில்லை. வாய்ப்பு அளித்தாலும் போட்டியிட மாட்டோம். அன்போடு வேண்டாம் என்று மறுத்து விடுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →