Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

Petition will be filed in Karnataka High Court to transfer Sasikala to Tamil Nadu Jail.

By   /  February 18, 2017  /  Comments Off on Petition will be filed in Karnataka High Court to transfer Sasikala to Tamil Nadu Jail.

    Print       Email

சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்றக் கோரி கர்நாடக ஐகோர்ட்டில் 20ம் தேதி மனுதாக்கல்.sasikalapic-u10141039229gdf-621x414livemint

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்றக்கோரி வருகிற 20-ந் தேதி (திங்கட்கிழமை) பெங்களூருவில் உள்ள கர்நாடக ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட உள்ளது.

InCorpTaxAct
Suvidha

இந்த மனுவில் குறிப்பிட வேண்டிய அம்சங்கள் தொடர்பாக சிறையில் உள்ள சசிகலாவிடம் வக்கீல்கள் முரளிதரராவ், அசோகன், பரணிகுமார் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

சசிகலா பெங்களூரு தனி கோர்ட்டில் சரண் அடைய வந்தபோது அவரது துணிகளை எடுத்து வந்த கார் மற்றும் இதர வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்ட தகவல்களை மனுவில் சேர்க்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

மேலும், சசிகலாவுக்கு 62 வயதாகிறது. இந்த நிலையில் அவருக்கு நீரிழிவு நோய், மூட்டு வலி மற்றும் சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தினால் கண்பாதிப்பு போன்ற உடல் நிலை குறித்து சென்னையில் உள்ள டாக்டர்களை அழைத்து சிகிச்சை பெற வேண்டிய அவசியம் உள்ளிட்ட அம்சங்களை மனுவில் சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மனுவில் குறிப்பிடப்படும் காரணங்கள் கோர்ட்டு ஏற்றுக் கொள்ளும் வகையில் இருக்க வேண்டும் என்று சசிகலா வக்கீல்களிடம் கூறியதாக தெரியவருகிறது.

இந்த மனுதாக்கல் தொடர்பாக கர்நாடகத்தை சேர்ந்த மூத்த வக்கீல் பாலாஜி சிங் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடகாவில் உள்ள தனி கோர்ட்டில் நடந்ததால் தண்டனை பெற்றுள்ள குற்றவாளிகள் கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஒரு வேளை அவர்கள் ஏதாவது காரணம் கூறி தமிழக சிறைக்கு மாற்றம் செய்யவேண்டும் என்றால் கர்நாடகாவில் உள்ள சிறப்பு தனி நீதிமன்றத்தில் ஒப்புதலை பெறவேண்டும். அப்படி ஒப்புதல் பெற்று சென்றாலும், உடல்நல பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்வது, பரோலில் செல்வது உள்பட எந்த பிரச்சினை என்றாலும் பெங்களூரு தனி நீதிமன்றத்தில் முறைப்படி மனுதாக்கல் செய்து நீதிபதியின் அனுமதியை சசிகலா பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நேற்று பரப்பன அக்ரஹார சிறைக்கு வெளியே பொது மக்கள் மற்றும் அ.தி.மு.க. தொண்டர்கள் கூட்டம் இல்லை, அங்கு வெறிச்சோடி காணப்பட்டன. கர்நாடகா போலீசார் மட்டுமே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தலா ரூ.10 கோடி அபராதம் செலுத்த வேண்டும். இதற்கு இன்னும் கால அவகாசம் இருப்பதால் இதுவரை அபராதத்தை அவர்கள் செலுத்தவில்லை.

இதுதொடர்பாக அபராதம் செலுத்தும் முடிவை இன்னும் சசிகலா தரப்பினர் அறிவிக்கவில்லை.

ஒருவேளை அவர்கள் அபராதத் தொகை கட்ட தவறினால் அவர்களது சொத்துகளை ஏலம் விட்டு அதன் மூலம் வரும் வருவாயை அபராதத் தொகைக்கு கோர்ட்டு எடுத்து கொள்ளும்.

பரப்பன அக்ரஹார சிறையில் நேற்று சசிகலா மகிழ்ச்சியாக காணப்பட்டார். காலை முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரை சிறை வளாகத்தில் உள்ள மரத்தடியில் அமர்ந்து இளவரசியுடன் பேசிக் கொண்டிருந்தார். சுதாகரனையும் நேரில் வரவழைத்து பேசியதாக கூறப்படுகிறது.

மீதி நேரத்தில் சசிகலா புத்தகங்களை படித்ததாக சிறையில் உள்ள பெண் போலீசார் தெரிவித்தனர்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →