Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Pinarayi Vijayan to become kerala C.M

By   /  May 21, 2016  /  Comments Off on Pinarayi Vijayan to become kerala C.M

    Print       Email

20160128060315பினராய் விஜயனை கேரள முதல்வராக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுவில் ஒருமித்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

முதல்வர் பதவியில் அமரப் போவது யார் என்பதில் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர்கள் வி.எஸ்.அச்சுதானந்தனுக்கும், பினராயி விஜயனுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில் கட்சியின் மாநில குழு இந்த முடிவை எடுத்துள்ளது.

InCorpTaxAct
Suvidha

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் சீதாராம் யெச்சூரி மற்றும் பொலிட் பீரோ உறுப்பினர் பிரகாஷ் காரத் முன்னிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக யெச்சூரியும், பிரகாஷ் காரத்தும் கட்சியின் மூத்த தலைவரான வி.எஸ்.அச்சுதானந்தனுடன் ஆலோசனை நடத்தினர். அச்சுதானந்தன் 2-வது முறையாக முதல்வராக விருப்பம் தெரிவித்திருந்தார். எனவே, அவரை சமரசம் செய்வதற்காக ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

கேரளாவில் மார்க்சிஸ்ட் தலைமை யிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்தக் கூட்டணி மொத்தம் உள்ள 140-ல் 91 இடங்களைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →