112 அடி உயர ஆதியோகி சிவன் சிலையைக் கோவை ஈஷா மையத்தில் திற்ந்து வைத்தார் பிரதமர் மோடி.
மகாசிவராத்திரி விழவை முன்னிட்டு கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி வந்தார்.
கோவை விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர், கோவை விமான நிலையத்திலிருந்து ஒரே ஹெலிகாப்டரில் பிரதமர், ஆளுநர், முதல்வர் மூவரும் விழாவிற்கு சென்றனர்.
ஈஷா யோகா மையத்தில் பிரதமர் மோடி பிராத்தனை செய்தார். பின்னர் அங்குள்ள தியான லிங்கத்திற்கு பிரதமர் மோடி சிறப்பு பூஜை செய்தார். பிரதமர் மோடிக்கு ஜக்கி வாசுதேவ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
இந்நிலையில், சரியாக 7 மணியளவில் 112 அடி உயரமுள்ள ஆதியோகி சிவன் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். பிரதமர் மோடி ஜோதியை ஏற்றி சிலையை திறந்து வைத்தார். ஆதியோகி புத்தகத்தையும் வெளியிட்டார்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.