Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

PM Narendra Modi promoting private firms, says Mayawati

By   /  September 5, 2016  /  Comments Off on PM Narendra Modi promoting private firms, says Mayawati

    Print       Email

mayawati-7594அபாண்டமான குற்றச்சாட்டு: மாயாவதி பேச்சு

உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நோக்கில் பகுஜன் சமாஜ் தலைவரும், முன்னாள் முதல்–மந்திரியுமான மாயாவதி தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

InCorpTaxAct
Suvidha

அந்தவகையில் அலகாபாத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,

நாங்கள் தேர்தல் ‘டிக்கெட்’டுகளை விற்பனை செய்வதாக அபாண்டமாக குற்றம் சாட்டி வருகின்றனர். ஒருபுறம் எங்கள் கட்சி வலிமையற்று இருப்பதாக கூறும் எங்கள் எதிரிகள், மறுபுறம் எங்கள் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட டிக்கெட் வாங்குவதற்காக மக்கள் கோடிக்கணக்கில் செலழிப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். இந்த முரண்பாட்டை சாதாரண மக்களும் புரிந்து கொள்ள முடியும்.

சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு நாங்கள் பயந்து போய் இருப்பதாக சமாஜ்வாடி, பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மறைமுகமாக ஒருமித்த முடிவு எடுத்து, பொய்யான தகவலை பரப்பி வருகின்றன. ஆனால் உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தல் களத்தில் பிற கட்சிகளை விட பகுஜன் சமாஜ் கட்சிதான் முன்னணியில் இருக்கிறது.

உத்தரபிரதேசத்தில் இன்று தேர்தல் நடத்தினால் கூட பகுஜன் சமாஜ் கட்சி 3–வது இடத்தையே பிடிக்கும் என கருத்துக்கணிப்பு வெளியிட்டு உள்ளனர். இது பொய். எங்கள் எதிரிகளுக்கு குறிப்பாக பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு ஊடகங்களை கட்டுப்படுத்தும் ஏராளமான தொழிலதிபர்கள் உள்ளனர். அவர்களால், நாங்கள் 3–வது இடம் என்ன, 4–வது இடம் கூட பிடிப்போம் என கூற முடியும்.

கடந்த 2007–ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்னரும் இவ்வாறுதான் கூறினர். ஆனால் அந்த தேர்தலில் நாங்கள் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றோம் என்பதை நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு மாயாவதி கூறினார்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →