Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

PM to stop bathroom politics, Shiv Sena slams Narendra Modi,  

By   /  February 14, 2017  /  Comments Off on PM to stop bathroom politics, Shiv Sena slams Narendra Modi,  

    Print       Email

447794-shiv-sena-narendra-modiகுளியலறை அரசியல் நடத்துவதை நிறுத்துங்கள் ; ஆட்சி நிர்வாகத்தில் கவனம் செலுத்துங்கள்: மோடிக்கு சிவசேனா அறிவுரை

பிறரின் குளியல் அறையில் எட்டிப்பார்ப்பதை விடுத்து, ஆட்சி நிர்வாகத்தில் கவனம் செலுத்துங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கூட்டணிக் கட்சியான சிவசேனா அறிவுறுத்தியுள்ளது.

InCorpTaxAct
Suvidha

இதுகுறித்து சிவசேனாவின் அதிகாரபூர்வ இதழான ‘சாம்னா’வில் திங்கட்கிழமை வெளியான தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:

உத்தரப் பிரதேசத்தில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தபோது, எதிர்க்கட்சிகளின் ஜாதகம் தன்னிடம் உள்ளதாக அச்சுறுத்தினார். இதற்கு முதல்வர் அகிலேஷ் யாதவ், அனைவரின் ஜாதகமும் இணைய தளத்தில் தங்குதடையின்றி கிடைப்பதாக பதில் அளித்தார். தேர்தல் பிரச்சாரம் எந்த அளவுக்கு தரம் தாழ்ந்துள்ளது என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டாகும். குறைந்தபட்சம் பிரதமர் மற்றும் முதல்வர் பதவி வகிப்பவர்கள் இதுபோன்ற பேச்சுகளை தவிர்க்க வேண்டும். இப்பதவி வகிப்பவர்கள் அதன் மாண்பை காக்க வேண்டும்.

பிரதமர் டெல்லியிலும் பாஜக ஆளும் மாநிலங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். பிறரின் குளியல் அறையில் ஒருவர் எட்டிப்பார்க்க கூடாது. இதை தவிர்க்க வேண்டும்.

அரசியல் சாசனப் பதவி வகிப்பவர்கள், எதிர்க்கட்சிகளை அசுச்சுறுத்த அரசு இயந்திரத்தை பயன்படுத்துவது அரசியல் ஊழலாகும். ஆனால் இவையெல்லாம் வெளிப்படையாக நடக்கின்றன. பிரதமரும் முதல்வரும் தங்கள் பிரச்சாரத்தில் அச்சுறுத்துவது, சவால் விடுவது, அறிவிப்புகள் வெளியிடுவது, வாக்குறுதி அளிப்பது என்ற வகையில் பேசுகின்றனர். எந்த சட்டவிதியின் கீழ் இவர்கள் இதை செய்ய முடிகிறது?

நீங்கள் ஆட்சியில் இருப்பதால் எதிர்க்கட்சிகளின் ஜாதகம் உங்களிடம் உள்ளது. நீங்கள் ஆட்சியை விட்டு இறங்கினால் உங்கள் ஜாதகம் அடுத்து ஆட்சி அமைப்பவரின் கையில் இருக்கும்.

இவ்வாறு சாம்னா நாளேட்டில் கூறப்பட்டுள்ளது.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →