Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Police duty is not only to protect rulers, they must protect civilians first – Says Karunanidhi

By   /  June 30, 2016  /  Comments Off on Police duty is not only to protect rulers, they must protect civilians first – Says Karunanidhi

    Print       Email

Karunanidhi_wheelchair650ஆட்சியாளர்களுக்கு மட்டுமல்ல.. பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதும் காவல்துறை கடமை: கருணாநிதி

சாதாரண பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதும் தங்கள் பணிதான் என்பதை காவல் துறையினர் உணர வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

InCorpTaxAct
Suvidha

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழகத்தில் பட்டப்பகலில் நடைபெற்று வரும் கொலைகளில் ஒன்றாக கடந்த 24-ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற பெண் பொதுமக்கள் முன்னிலையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். திமுக சார்பில் பொருளாளர் மு.க.ஸ்டாலின், சுவாதியின் வீட்டுக்குச் சென்று அவரது பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறியிருக்கிறார். இந்த படுகொலை குறித்து தமிழகம் முழுவதும் இருந்து காவல் துறைக்கு பல கண்டனங்கள் வந்துள்ளன.

சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிகளில் ஒருவரான என்.கிருபாகரன் கடந்த 28-ம் தேதி தலைமை நீதிபதி எஸ்.கே.கவுலுக்கு எழுதிய கடிதத்தில், பொதுமக்கள் முன்னிலையில் சுவாதி என்ற பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. அந்தப் பெண் அபாயக் குரல் எழுப்பியும் யாரும் காப்பாற்ற முன்வரவில்லை.

அனாதை போல ரயில் நிலையத்தில் பல மணி நேரம் பிணமாகக் கிடந்துள்ளார். கொலை நடந்த நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா இல்லை. இந்த கொலை தொடர்பாவும், பொது இடங்களில் பாதுகாப்பு குறிப்பாக பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக மத்திய மாநில அரசுகளிடம் 10 கேள்விகளை எழுப்பியிருந்தார்.

இந்தக் கடிதத்தை படித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், இந்த கடிதத்தையே ஒரு மனுவாகக் கருதி தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி கிருபாகரன் எழுப்பியுள்ள 10 கேள்விகளுக்கு ஆகஸ்ட் 4-ம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

நீதிபதி கிருபாகரன் தலைமை நீதிபதிக்கு எழுதிய மற்றொரு கடிதத்தில், சுவாதியை பாதுகாக்க தவறியதற்காக அவரது பெற்றோருக்கு ரயில்வே அமைச்சகம் ஏன் இழப்பீடு வழங்கக் கூடாது என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் சேலத்தில் இணையதளத்தில் ஆபாசமாக படம் வெளியிட்டதால் வினுப்பிரியா என்ற 22 வயது ஆசிரியை தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்தப் பெண்ணின் பெற்றோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கதறியிருக்கிறார்கள்.

கொல்லப்பட்ட சுவாதி, தற்கொலை செய்து கொண்ட வினுப்பிரியா குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாளிதழ்கள், இதழ்கள் எல்லாம் இந்தக் கொலைகள் பற்றி பக்கம் பக்கமாக எழுதி வருகின்றன.

ஆட்சியில் இருப்பவர்களுக்கு பாதுகாப்பு தருவது, எதிர்க்கட்சியினரை கண்காணிப்பதை மட்டும் தங்கள் பணியாகக் கருதாமல் சாதாரண மக்களுக்கும் பாதுகாப்பு வழங்குவதும் தங்கள் பணிதான் என்பதை காவல்துறையினர் உணர வேண்டும். சாதாரண பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்காத காவல் துறையினருக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கருணாநிதி கூறியுள்ளார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →