Loading...
You are here:  Home  >  Movies  >  Bollywood  >  Current Article

Preity  Zinta freed in cheque defrauding case

By   /  March 22, 2016  /  Comments Off on Preity  Zinta freed in cheque defrauding case

    Print       Email

Priety-Zinta-in-Veer-Zaraசெக் மோசடி வழக்கிலிருந்து நடிகை பிரீத்தி ஜிந்தா விடுதலை.

நடிகை பிரீத்தி ஜிந்தா தான் நடிக்கும் இந்திப்படம் ஒன்றுக்கு கதாசிரியராக அப்பாஸ் டைரேவாலா என்பவரைக் கடந்த 2012ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தார். இதற்காக அவருக்கு 21 லட்சத்துக்கான காசோலையை பிரீத்தி ஜிந்தா வழங்கினார். வங்கியில் போடப்பட்ட காசோலை பணம் இல்லையென்று திரும்பி வந்துவிட்டது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த காசோலைக்குப் பணம் தர வேண்டாம் என்று பிரீத்தி ஜிந்தா தரப்பில் இருந்து வங்கிக்குத் தகவல் அனுப்பப்பட்டதால் அந்தக் காசோலைத் திரும்பி வந்துவிட்டது.

InCorpTaxAct
Suvidha

இதைத் தொடர்ந்து பிரீத்தி ஜிந்தாவுக்கு கதாசிரியர் வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பினார். கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. பிரீத்தி ஜிந்தா சார்பில் ஆஜரான வக்கீல் கதாசிரியர் சொன்னபடி பணியை முடித்துத் தரவில்லை என்று வாதிட்டார்.

4 ஆண்டுகளாக இந்த வழக்கு மும்பை அந்தேரியில் உள்ள மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. நடிகை பிரீத்தி ஜிந்தாவை விடுதலை செய்து மாஜிஸ்டிரேட் தீர்ப்பு கூறினார்.

தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்தால் வருகிற ஏப்ரல் 4ம் தேதி கோர்ட்டில் ஆஜராகி பிரீத்தி ஜிந்தா ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என்றும் மாஜிஸ்டிரேட் உத்தரவிட்டார்.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →