ஆம்பூர் தொகுதியில் பிரேமலதா போட்டி?
ஆம்பூர் தொகுதியில் தே.மு.தி.க. சார்பில் பிரேமலதா போட்டியிட வேண்டும் என்று வேலூர் மேற்கு மாவட்ட தே.மு.தி.க. மகளிரணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வேலூர் மேற்கு மாவட்ட தே.மு.தி.க. மகளிரணி ஆலோசனை கூட்டம் ஆம்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. ஆம்பூர் நகர மகளிர் அணி தலைவி சித்ரா ராஜேஸ் தலைமை தாங்கினார்.
மாநில துணை செயலாளர் சுபாமங்கலம் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் வேலூர் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த மகளிரணி நிர்வாகிகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
காஞ்சிபுரத்தில் வருகிற 20–ந்தேதி நடைபெற இருக்கும் தே.மு.தி.க. மாநாட்டில் திரளாக கலந்து கொள்வது.
மேலும் சட்டசபை தேர்தலில் ஆம்பூர் தொகுதியில் தே.மு.தி.க. சார்பில் பிரேமலதா போட்டியிட வேண்டும். அவரது வெற்றிக்கு தீவிரமாக தேர்தல் பணியாற்ற வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.