உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது அரசியலமைப்புக்கு எதிரானது என பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் குற்றம் சாட்டினார்.
இதுதொடர்பாக சட்டசபை வளாகத்தில் அவர் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது முற்றிலும் ஜனநாயகமற்ற மற்றும் அரசியலமைப்பிற்கு முரணான செயலாகும்.
சட்டசபையில் பெரும்பான்மையையை நிரூபிக்கவேண்டும் என உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவாக கூறியுள்ளது. மார்ச் 28-ம் தேதி (இன்று) சட்டசபையை கூட்ட திட்டமிடப்பட்ட நிலையில், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியதில் நியாயம் இல்லை.
கட்சி தாவலை அவர்கள் (மத்திய அரசு) ஊக்குவிப்பதாக இருந்தால் அரசியலமைப்பு சட்டத்தின் 10-வது பிரிவை நீக்கியிருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.