Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

Presidential nominee will be announced on June 23: Venkaiah Naidu

By   /  June 19, 2017  /  Comments Off on Presidential nominee will be announced on June 23: Venkaiah Naidu

    Print       Email

ஜூன் 23-ம் தேதிக்குள் குடியரசுத் தலைவர் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும்: வெங்கய்ய நாயுடு

பிரதமர் மோடி வெளிநாடு செல்ல இருப்பதால் ஜூன் 23-ம் தேதிக்குள் குடியரசுத் தலைவர் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார்.

EIS
EnGeniusInc

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் அடுத்த மாதம் 25-ம் தேதி முடிகிறது. அதற்கு முன்னர் ஜூலை 17-ம் தேதி புதிய குடியரசுத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கலும் தொடங்கி விட்டது. ஆனால், ஆளும் பாஜக கூட்டணி சார்பில் எந்த வேட்பாளர் பெயரும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இதற்கிடையில், காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ஆர்ஜேடி, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உட்பட எல்லா எதிர்க்கட்சியினரும் தங்கள் சார்பில் பொது வேட்பாளரை தேர்தலில் போட்டியிட வைக்க தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அதேவேளையில் குடியரசுத் தலைவரை அனை வரும் ஒருமித்த கருத்துடன் தேர்ந்தெடுக்க பாஜக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. அதற்காக அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, வெங்கய்ய நாயுடு ஆகியோர் அடங்கிய 3 பேர் குழுவை பாஜக அமைத்துள்ளது.

அதன்படி சோனியா காந்தி, சீதாராம் யெச்சூரி, ராம்விலாஸ் பாஸ்வான், உத்தவ் தாக்கரே ஆகியோரை பாஜக தலைவர்கள் சந்தித்துப் பேசியுள்ளனர்.

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, ” மோடி வெளிநாடு செல்ல இருப்பதால் ஜூன் 23-ம் தேதிக்குள் குடியரசுத் தலைவர் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும்” என்றார்.

Charter Global
InfoSmart
Swapna
InCorpTaxAct
    Print       Email

You might also like...

Buddha Venkanna, MLC condemned the comments of Botsa Satyanarayana

Read More →