Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Priyanka Chopra Invited To Present Oscar Award

By   /  February 2, 2016  /  Comments Off on Priyanka Chopra Invited To Present Oscar Award

    Print       Email

priyanka-chopraஆஸ்கார் அவார்டு வழங்க பிரியங்கா சோப்ராவுக்கு அழைப்பு.

அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் உள்ள ஹாலிவுட்டின் டால்ஃபி தியேட்டரில் பிப்ரவரி மாதம் 28 ம்தேதியன்று உலகப் புகழ்பெற்ற ஆஸ்கார் அவார்டுகள் பரிசளிப்பு விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பரிசளிக்க இந்திப் படத்தின் புகழ் பெற்ற நட்சத்திரமான பிரியங்கா சோப்ராவை ஆஸ்கார் விழாக்குழு அழைத்திருக்கிறது.

InCorpTaxAct
Suvidha

இந்த அழைப்பே ஒரு பெரிய கௌரவமாகப் பார்க்கப்படுகிறது. இந்தச் செய்திக்காக பிரியங்கா சோப்ராவுக்கு நேரிலும் தொலைபேசியிலும் டுவிட்டரிலும் ஏராளமான வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த வருடம் இந்தியாவின் சார்பாக கலந்துகொள்ளப் போகிறவர் இவர் ஒருவர்தான். அவார்டுக்கு அனுப்பிவைக்கப்பட்ட கோர்ட் என்ற படமும் இறுதிச்சுற்றுக்கு நுழைய தகுதி பெறவில்லை. அமெரிக்காவின் புகழ்பெற்ற குவாண்டிகோ (QUANTICO) நிகழ்ச்சியில் பிரியங்கா சோப்ரா கலந்துகொண்டதைத் தொடர்ந்து அவருக்கு இந்தச் சிறப்பு வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

“எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நான் அன்றைக்கு அணிந்துகொள்ளும் உடை எது என்பதைத் தேடத்துவங்கிவிட்டேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார் பிரியங்கா சோப்ரா.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →