Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Protests against PF changes : Violence erupts Bengaluru : Govt rolls back PF withdrawal norms.

By   /  April 20, 2016  /  Comments Off on Protests against PF changes : Violence erupts Bengaluru : Govt rolls back PF withdrawal norms.

    Print       Email

0பி.எஃப் திட்டத்தில் மாற்றம் ; ஆயத்த ஆடைத் தொழிலாளர்களின் போராட்டத்தில் வன்முறை. 2-ம் நாளாகத் தொடர்கிறது ஆர்ப்பாட்டம். முடிவை வாபஸ் பெற்றது மத்திய அரசு.

தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்த மாற்றம் வருகிற மே 1–ந் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது.

InCorpTaxAct
Suvidha

அதாவது வருகிற 30–ந் தேதிக்குள் தொழிலாளர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதியை பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லையெனில், ஏதாவது காரணத்திற்காக 58 வயதுக்குள் தொழிலாளர்கள் வேலையில் இருந்து நின்று விட்டால், அவர்களது சம்பளத்தில் இருந்து பிடிக்கப்படும் வைப்பு நிதியை மட்டுமே பெற முடியும்.

தொழிலாளர்களுக்காக, அவர்கள் வேலை செய்யும் நிறுவனங்கள் வழங்கும் நிதியை 58 வயதுக்கு பின்பு தான் பெற்றுக் கொள்ள முடியும். அந்த நிதிக்கு வட்டி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பால் பல்வேறு தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். இதனால் வருங்கால வைப்பு நிதியில் மாற்றம் செய்யக்கூடாது என்று தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், வருங்கால வைப்பு நிதியில் மாற்றம் செய்யக்கூடாது என்றும், பழைய முறையையே பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி பெங்களூரு–ஓசூர் ரோடு, பொம்மனஹள்ளி ஜங்ஷனில் நேற்று காலையில் ஆயத்த ஆடை தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள், தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்தப் போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

இந்நிலையில், இரண்டாவது நாளான இன்று காலை பொம்மனஹள்ளி ஜங்ஷனில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பொம்மனஹள்ளி மற்றும் ஓசூர் சாலை ஜங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் இப்பகுதிகளில்

Bengaluru : Garment workers torch furniture during a protest over EPF withdrawal norm, in Bengaluru on Tuesday. PTI Photo (PTI4_19_2016_000242B)

போக்குவரத்து வேறு பாதைகளுக்கு மாற்றபட்டுள்ளார். யஸ்வந்த்புர், கோர்குண்டபால்யா பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

பல்வேறு இடங்களில் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. 5 பேருந்துகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பல்வேறு இடங்களில் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டன. இதனால் பதற்றமுள்ள பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இதனால் போராட்டம் வன்முறையில் முடிந்தது. பதற்றம் அதிகரித்ததால் பெங்களூரு மாநகரம் முழுவதும் மாநகர பேருந்துகள் நிறுத்தப்பட்டன.

பி.எப் திட்டத்தில் மாற்றத்தை கொண்டு வருவது தொழிலாளர் விரோத நடவடிக்கை என்று தொழிலாளர் சங்கத்தினர் குற்றம்சாட்டினர்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →