தங்கச் சட்டை அணிந்து வலம்வந்த புனே தொழிலதிபர் அடித்துக் கொலை
மராட்டிய மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சுமார் ஒரு கோடி மதிப்புள்ள தங்க சட்டை அணிந்து ஊடக கவனத்தை பெற்றவர் புனேவை சேர்ந்த தொழிலதிபர் தத்தாரே புகே.
புனே அருகே உள்ள பிம்ப்ரி என்ற இடத்தை சேர்ந்தவர் இவர், சிட்பண்ட் தொழில் செய்து வந்தார். இவரின் மனைவி சீமா, புனே நகர மாநகராட்சி கவுன்சிலர். கடந்த 2013-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டன்று ரூ.1.2 கோடி செலவில் 3.2 கிலோ தங்கத்தை உருக்கி, அதை சட்டையாக அணிந்து தத்தாரே புகே வலம் வந்தார்.
இந்த புகைப்படமும் சமூக வலைதளங்களிலும் ஊடகத்திலும் வைரலாக பரவியதால், இந்தியா முழுவதும் பரவலாக தத்தாரே புகே பிரபலமாகி இருந்தார்.
இந்த நிலையில், நேற்று இரவு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்றபோது அங்குள்ள கும்பலால், தனது மகன் கண்ணெதிரே தத்தாரே புகே அடித்துக் கொல்லட்டார்.
பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு நண்பர் ஒருவர் விடுத்த அழைப்பின் பேரில் தனது மகனுடன் திறந்த வெளி மைதானம் ஒன்றிற்கு நேற்று இரவு 11.30 மணியளவில் இவர் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது 12 பேர் அடங்கிய கும்பல் இவர் மீது கற்கள் மற்றும் கூர்மையான ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தியதில் தத்தாரே புகே பரிதாபமாக பலியானார்.
இந்த சம்பவம் குறித்து உள்ளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பண பரிவர்த்தனை தொடர்பான பிரச்சனையில் இவரை யாராவது அடித்துக் கொன்றிருக்கலாம் என்று கருதும் போலீசார், சந்தேகத்தின் பேரில் நான்கு பேரை கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.