Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Puthiya Tamilagam joins DMK alliance. Gets 4 Seats.

By   /  April 7, 2016  /  Comments Off on Puthiya Tamilagam joins DMK alliance. Gets 4 Seats.

    Print       Email

12920530_1176495502362653_416012507977407376_nபுதிய தமிழகம் திமுக கூட்டணியில் இணைந்தது. 4 சீட்டுகள் ஒதுக்கீடு.

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தி.மு.க. தலைவர் கருணாநிதியை இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இருக்கட்சிகளுக்கும் இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டது.

InCorpTaxAct
Suvidha

இதனையடுத்து, தி.மு.க. கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இணைந்துள்ளது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி திமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், “முன்பே அறிவித்தபடி புதிய தமிழகம் கட்சி வெற்றிக் கூட்டணியில் இணைந்துள்ளது. திமுக கூட்டணி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, கலைஞர் 6-வது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்பார். எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து நாளை ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும்.” என்றார்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் முன்னிலையில் தொகுதி உடன்பாட்டில் இருதரப்பினரும் கையெழுத்திட்டனர்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
கூட்டணி கட்சிகளுக்கு இதுவரை 58 தொகுதிகளை தி.மு.க. கொடுத்துள்ளது.

புதிய தமிழகம் கட்சி கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →