Loading...
You are here:  Home  >  Movies  >  Bollywood  >  Current Article

Raghuram Rajan ,Sania Mirza,Priyanka Chopra among ‘Most influential persons’ of  the world

By   /  April 23, 2016  /  Comments Off on Raghuram Rajan ,Sania Mirza,Priyanka Chopra among ‘Most influential persons’ of  the world

    Print       Email

டைம்ஸ் இதழின் செல்வாக்கான 100 பேர் பட்டியலில் இந்தியாவின் சானியா மிர்சா, ரகுராம் ராஜன், பிரியங்கா சோப்ரா FotorCreated124ஆகியோர் இடம் பிடித்தனர்.

உலகிலேயே மிகவும் செல்வாக்கான 100 பேர் பட்டியலை அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான ‘டைம்‘ வெளியிட்டுள்ளது. அதில், ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா, ‘கூகுள்‘ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, ‘பிளிப்கார்ட்‘ நிறுவனத்தின் நிறுவனர்கள் பின்னி பன்சால், சச்சின் பன்சால் ஆகிய இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.

InCorpTaxAct
Suvidha

மேலும், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, மியான்மர் தலைவி ஆங்சான் சூகி, அமெரிக்க முன்னாள் மந்திரி ஹிலாரி கிளிண்டன், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க காத்திருக்கும் குடியரசு கட்சி தலைவர் டொனால்டு டிரம்ப், பிரபல சுற்றுச்சூழல் நிபுணர் சுனிதா நரைன், பன்னாட்டு நிதியத்தின் தலைவர் கிறிஸ்டின் லகார்டே, ஆலிவுட் நடிகர் லியானார்டோ டிகாப்ரியோ, அமெரிக்க இசையமைப்பாளர் லின் மேனுவல் மிராண்டா ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.

அந்த பத்திரிகையில், ரகுராம் ராஜனை ‘பொருளாதார தீர்க்கதரிசி‘ என்று வர்ணித்துள்ளனர். கடந்த 2006-ம் ஆண்டுவரை அவர் பன்னாட்டு நிதியத்தில் பணியாற்றியபோது, உலக பொருளாதார பின்னடைவை முன்கூட்டியே கணித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →