Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Raghuram Rajan unfit to be RBI  Governor. Send him back to Chicago : Swamy tells Modi.

By   /  May 12, 2016  /  Comments Off on Raghuram Rajan unfit to be RBI  Governor. Send him back to Chicago : Swamy tells Modi.

    Print       Email

28-1443426572-subramanian-raghuram-modiரிசர்வ் பேங்க் கவர்னர் ரகுராம் ராஜனை சிகாகோவுக்கு திருப்பி அனுப்புங்கள்; மோடிக்கு சுப்ரமணியம் சாமியின் சர்ச்சைப் பேச்சு.

பா.ஜ.க. சார்பாக மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டதில் இருந்து பல சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசி பரபரப்பை கிளப்பி வருகிறார் சுப்பிரமணியன் சாமி. இந்த வரிசையில் இன்று ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனை சிகாகோ பல்கலைக்கழகத்திற்கு திருப்பி அனுப்பிவிடுங்கள் என்று கூறி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

InCorpTaxAct
Suvidha

இன்று செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன் சாமி “தற்போதைய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் நமது நாட்டிற்கு சரியானவர் என்று நான் நினைக்கவில்லை. இது பற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை. ஆனால் வட்டி விகிதத்தை அதிகரிக்கும் ரகுராம் ராஜனின் முடிவு எதிர்மாறான விளைவையே ஏற்படுத்தி நாட்டை பாதித்துவிட்டது. அனைத்து தொழில்களும் நசிந்துவிட்டன. வேலை வாய்ப்பின்மை அதிகரித்துவிட்டது.

ரகுராம் ராஜனை அவரது பொறுப்பில் இருந்து எவ்வளவு வேகமாக விடுவிக்க முடியுமோ அவ்வளவு வேகமாக விடுவித்து, அவரை மீண்டும் சிகாகோவிற்கு திருப்பி அனுப்பிவிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநராக பொறுப்பு ஏற்பதற்கு முன்பாக ரகுராம் ராஜன், அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தின் வணிகத்துறையில் சிறப்பு பேராசிரியராக பணியாற்றி வந்தார். இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டதும் பல்கலைக்கழகத்தில் இருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு இந்தியா வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →